அசாம் வெள்ளம்: 52 பேர் பலி, 24 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு
அசாமில் கடந்த 24 மணி நேரத்தில் வெள்ளம் மோசமடைந்துள்ளது. இதன் விளைவாக 52 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்துள்ளனர். அசாம் மாநிலத்தின் 35 மாவட்டங்களுள் 30 மாவட்டங்களை வெள்ளம் தொடர்ந்து அழித்து வருவதால், மாநிலம் முழுவதும் 24 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த அழிவு ஒரு மாதமாக நீடித்து வருகிறது. இதனால் உயிர் இழப்புகள், பொருள் சேதங்கள், பயிர்கள் நாசம் மற்றும் கால்நடைகள் இழப்பு ஆகியவை தொடர்ந்து கொண்டிருக்கிறது. அசாமின் பார்பெட்டா மாவட்டத்தையும் வெள்ளம் கடுமையாகப் பாதித்துள்ளது. கிட்டத்தட்ட 1,40,000 மக்கள் அந்த மாவட்டத்தில் பாதிக்கப்பட்டுள்னர். மேலும், 179 கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன.
பாதிக்கப்பட்ட பகுதிகளை அசாம் முதல்வர் பார்வையிட்டார்
பார்பெட்டா மாவட்டத்தில் சுமார் 1,571.5 ஹெக்டேர் பயிர் நாசமாகி உள்ளது. துப்ரி மற்றொரு பெரிதும் பாதிக்கப்பட்ட மாவட்டமாகும். அங்கு 775,721 க்கும் மேற்பட்ட மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்ட்டுள்ளனர். அப்பகுதியில் நீரில் மூழ்கி 63,490.97 ஹெக்டேர் பயிர்கள் நாசமாகியுள்ளன. 112 வருவாய் வட்டங்களில் உள்ள 3,518 கிராமங்களை வெள்ளம் பாதித்துள்ளது. அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் (ASDMA) கூற்றுப்படி, பிரம்மபுத்திரா நதியின் நீர்மட்டம் பல இடங்களில் அபாயக் குறியை விட அதிகமாக உள்ளது. நேற்று, அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, திப்ருகர் நகரத்திற்குச் சென்று வெள்ள நிலைமையை ஆய்வு செய்தார். 106 கர்ப்பிணிப் பெண்கள், 4,700 குழந்தைகள் உட்பட 25,744 பேருக்காக 500-க்கும் மேற்பட்ட நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.