NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தமிழகம், புதுச்சேரியில் மே 27 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    தமிழகம், புதுச்சேரியில் மே 27 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
    மே 27 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு

    தமிழகம், புதுச்சேரியில் மே 27 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

    எழுதியவர் Venkatalakshmi V
    May 22, 2025
    08:45 am

    செய்தி முன்னோட்டம்

    தமிழகத்தின் பல பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மே 27 ஆம் தேதி வரை மிதமான மழை பெய்யக்கூடிய வாய்ப்பு இருப்பதாக மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    நேற்று காலை முடிவடைந்த 24 மணி நேரத்தில், ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பகுதியில் அதிகபட்சமாக 15 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. அதே மாவட்டத்தின் அரக்கோணம் பகுதியில் 12 செ.மீ. மழை விழுந்துள்ளது.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் கீழ்ப்பென்னாத்தூர் மற்றும் வெம்பாக்கம், ராணிப்பேட்டை மாவட்டத்தில் பாலாறு அணைக்கட்டு, திருவள்ளூர் மாவட்டத்தில் திருத்தணி ஆகிய இடங்களில் தலா 10 செ.மீ. மழை பெய்துள்ளது.

    மழை

    மே 27 வரை மழை நீடிக்கும் 

    மத்திய கிழக்கு அரபிக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, ஆந்திரா கரை வரை நீண்டுள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சிக்கு காரணமாக, தமிழகத்தின் சில பகுதிகள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் இன்றும், நாளையும் மிதமான மழை பெய்யக்கூடும்.

    இந்த நிலை மே-27 வரை தொடரும் எனக் கூறப்பட்டுள்ளது.

    சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் நிலையில், ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    மேலும், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் இன்றும் நாளையும் மணிக்கு 45 முதல் 50 கி.மீ. வேகத்திலும், இடையே 55 கி.மீ. வரை சூறாவளிக் காற்றுகள் வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    வானிலை ஆய்வு மையம்
    வானிலை எச்சரிக்கை
    வானிலை எச்சரிக்கை
    வானிலை அறிக்கை

    சமீபத்திய

    தமிழகம், புதுச்சேரியில் மே 27 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வானிலை ஆய்வு மையம்
    டிரம்ப் தான் காரணமா? இந்தியா-பாகிஸ்தான் போர்நிறுத்த கூற்று குறித்து முன்னாள் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் விமர்சனம் அமெரிக்கா
    இந்தியா - அமெரிக்கா இடையே ஜூலை 8க்குள் இடைக்கால வர்த்தகம் ஒப்பந்தம் கையெழுத்து ஆகலாம் எனத் தகவல் வர்த்தகம்
    18 வருட ஐபிஎல் வரலாற்றில் முதல்முறை; டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு நேர்ந்த சோகம் டெல்லி கேப்பிடல்ஸ்

    வானிலை ஆய்வு மையம்

    பொங்கல் பண்டிகை அன்று தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை கனமழை
    டெல்லி, அருகிலுள்ள நகரங்களில் அடர்ந்த பனிமூட்டம்; பார்வைத்திறன் பூஜ்ஜியத்திற்கு குறைந்தது  டெல்லி
    தென்தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு; சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை வானிலை அறிக்கை
    இங்கிலாந்தில் அரிய வானிலை: மணிக்கு 161 கிமீ வேகத்தில் காற்று வீசும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது இங்கிலாந்து

    வானிலை எச்சரிக்கை

    1901 முதல் இந்தியாவில் வெப்பமான ஆண்டு 2024: வானிலை ஆய்வு மையம் அறிக்கை வானிலை ஆய்வு மையம்
    வட இந்தியாவை சூழ்ந்த அடர் பனிமூட்டம்; விமானம், ரயில் சேவைகள் பாதிப்பு வடமாநிலங்கள்
    இந்தியாவில் வானிலை முன்னறிவிப்புகள் விரைவில் துல்லியமாக மாறும் வானிலை எச்சரிக்கை
    தமிழகத்தில் ஐந்து மாவட்டங்களுக்கு ஜனவரி 12 அன்று கனமழை; வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை தமிழகம்

    வானிலை எச்சரிக்கை

    நான்கு தமிழக மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் கணிப்பு கனமழை
    தென் தமிழகத்தின் மூன்று மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் முன்னறிவிப்பு கனமழை
    சென்னை மற்றும் வட தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் நாளையும் பனி மூட்டம்: தமிழ்நாடு வெதர்மேன் தகவல் சென்னை
    இந்த ஆண்டு பெங்களூரை அளவுக்கதிகமாக வெப்பம் தாக்கும்: வானிலை ஆய்வு மையம் வானிலை எச்சரிக்கை

    வானிலை அறிக்கை

    வானிலை அறிக்கை: பிப்ரவரி 25- மார்ச் 1 இந்தியா
    அடுத்து இரண்டு நாட்களுக்கு வெயில் பொளக்கப் போகுது; வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வானிலை எச்சரிக்கை
    இந்த ஆண்டு எதிர்பார்த்ததை விட முன்கூட்டியே வெப்ப அலைகள் வீசுவதற்கான காரணம் என்ன? வெப்ப அலைகள்
    மக்களே, தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு வெயில் வழக்கத்தை விட அதிகரிக்க போகிறது! தமிழகம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025