LOADING...
திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை மூடப்போவதாக அறிவித்த இயக்குனர் வெற்றிமாறன்
இயக்குநர் வெற்றிமாறன், தற்போது படங்களை தயாரிக்கும் பணியில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார்

திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை மூடப்போவதாக அறிவித்த இயக்குனர் வெற்றிமாறன்

எழுதியவர் Venkatalakshmi V
Sep 01, 2025
03:11 pm

செய்தி முன்னோட்டம்

சிறந்த சமூக பார்வையும், விமர்சன வெற்றியையும் பெற்ற திரைப்படங்களை உருவாக்கி வந்த இயக்குநர் வெற்றிமாறன், தற்போது படங்களை தயாரிக்கும் பணியில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார். அவரது இந்த முடிவு, திரைத்துறை வட்டாரத்தையும், ரசிகர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. தனது "கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பேனி" என்ற தயாரிப்பு நிறுவனம் மூலம் பல திறமையான படங்களை வழங்கிய வெற்றிமாறன், "இனிமேல் தயாரிப்புப் பணியில் ஈடுபடமாட்டேன்" எனத் தெரிவித்திருக்கிறார். தனுஷுடன் இணைந்து தயாரித்த விசாரணை, காக்கா முட்டை, வடசென்னை ஆகிய திரைப்படங்கள் விமர்சன ரீதியாக பெரும் புகழ் பெற்றவை. தற்போது அவர் தயாரித்துள்ள 'bad girl' திரைப்படம் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதற்குப் பிறகு, தயாரிப்பு பணி நிறைவடைகிறது என அவர் அறிவித்துள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

இயக்கம்

"தயாரிப்புக்கு மாற்றாக இயக்கத்துக்கே முழு கவனம்"

"என்னை போன்றவர்கள் படங்களை தயாரிப்பது சுலபமான விஷயம் இல்லை. இயக்கம் எனக்கு சுதந்திரத்தை அளிக்கிறது. ஆனால் தயாரிப்பு என்பது நிறைய அழுத்தங்களைக் கொண்ட ஒன்று. அதனால் இனிமேல் தயாரிப்பில் இருந்து விலகுகிறேன்," என்று வெற்றிமாறன் கூறியுள்ளார். ஆண்ட்ரியா நடிப்பில் வெற்றிமாறன் தயாரித்த 'மனுஷி' திரைப்படம் சென்சார் சிக்கலில் சிக்கியது. சென்சார் வாரியம், 37 காட்சிகளை நீக்கும்வரை சான்றிதழ் வழங்க முடியாது எனத் தெரிவித்த நிலையில், வெற்றிமாறன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், "ஆட்சேபகரமான காட்சிகள் நீக்கப்பட்ட பிறகே படத்திற்கு சான்றிதழ் பெற விண்ணப்பிக்க வேண்டும்" என தீர்ப்பளித்தார். இந்த விவகாரம், தயாரிப்பு பணியில் ஏற்பட்ட மனஉளைச்சலுக்கு ஒரு முக்கிய காரணமாக இருந்திருக்கலாம் என ரசிகர்கள் கருதுகின்றனர்.