
டிசம்பர் 1ல் வெளியாகிறது சலார் டிரைலர்
செய்தி முன்னோட்டம்
டிசம்பர் 22ஆம் தேதி வெளியாகும் சலார் பார்ட் 1 சீஸ்ஃபயர் திரைப்படத்தின் டிரைலர், டிசம்பர் ஒன்றாம் தேதி வெளியாகிறது.
கேஜிஎஃப் திரைப்படத்தின் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கும் சலார் திரைப்படத்தில், பிரபாஸ் கதாநாயகனாக நடிக்கிறார்.
இவருடன் மீனாட்சி சவுத்ரி, சுருதிஹாசன், பிரித்விராஜ் சுகுமாரன், ஈஸ்வரி ராவ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.
கடந்த ஜூலை மாதம் படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்ற நிலையில், டிசம்பர் ஒன்றாம் தேதி ட்ரெய்லர் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
மேலும், கடார்2 திரைப்படத்தில் நடித்த சிம்ரத் கவுர், இப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். அப்பாடல் தற்போது படமாக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
சலார் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது
#SimratKaur of #Gadar2, has done a special Song in #Prabhas's #Salaar pic.twitter.com/NozrigMpAL
— Ramesh Bala (@rameshlaus) November 9, 2023