Page Loader
விரைவில் ரீ-ரிலீஸ் ஆகும் கமலின் ஆளவந்தான் திரைப்படம்
ஆளவந்தான் திரைப்படம் 22 ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் நிலையில், மறு வெளியீடு குறித்த அறிவிப்பை தயாரிப்பாளர் தாணு வெளியிட்டுள்ளார்.

விரைவில் ரீ-ரிலீஸ் ஆகும் கமலின் ஆளவந்தான் திரைப்படம்

எழுதியவர் Srinath r
Nov 14, 2023
07:03 pm

செய்தி முன்னோட்டம்

கமல்ஹாசன் எழுதிய 'தாயம்' என்ற கதையைத் தழுவி படமாக்கப்பட்டு, கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான ஆளவந்தான் திரைப்படம் மீண்டும் திரையரங்குகளில் வெளியாகும் என 'கலைப்புலி' தாணு அறிவித்துள்ளார். சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில், கமல்ஹாசன் ஆளவந்தான் திரைப்படத்தில் வில்லனாகவும், கதாநாயகனாகவும் இரட்டை வேடத்தில் நடித்திருப்பார். அந்த காலத்திலேயே படம் பிரமாண்டமாக இருக்க, தொழில்நுட்ப கலைஞர்கள் வெளிநாட்டிலிருந்து வரவழைக்கப்பட்டனர். அனிமேஷன் காட்சிகள், கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் என படத்தில் புதுமையை புகுத்தினாலும், படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இப்படத்தை மறு வெளியீடு செய்ய வேண்டும் என, நீண்ட நாட்களாக ரசிகர்கள் கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில் தற்போது, உலகம் முழுவதும் ஆயிரம் திரையரங்குகளில் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட இப்படம் வெளியாகும் என படத்தின் தயாரிப்பாளர் தாணு தெரிவித்துள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

மீண்டும் திரைக்கு வரும் ஆளவந்தான்