மீண்டும் தாமதமாகும் சூர்யா திரைப்படம்- வெற்றிமாறனின் 'வாடிவாசல்'
சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி கொண்டிருக்கும் 'சூர்யா 42' படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடந்துகொண்டு இருக்கின்றன. இந்த படத்தில் ஹிந்தி நடிகை திஷா பதானி இவருக்கு ஜோடியாக நடிக்கிறார். இவர்களுடன் யோடி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் போன்றோர் நடிக்கின்றனர். இப்படத்தை யூவி கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றன. 3D தொழில் நுட்பத்துடன் இந்த படம் பத்து மொழிகளில் வெளிவர இருக்கிறது இப்படத்தின் ஹிந்தி உரிமையை தயாரிப்பாளர் ஜெயந்திலால் கடா அவர்கள் 100 கோடி கொடுத்து வாங்கியுள்ளார். இதனையடுத்து வெற்றி மாறன் இயக்கத்தில் உருவாகும் வாடிவாசல் திரைப்படத்தின் படப்பிடிப்பை தொடங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது.
சுதா கொங்கராவின் படத்தினால் மீண்டும் தள்ளிப்போகும் வாடிவாசல்
ஆனால் இயக்குனர் சுதா கொங்கராவின் படத்தில் சூர்யா அடுத்ததாக நடிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. இதனால் வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பு மேலும் தாமதமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம் சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டு அதன் பின்னர் சூர்யாவின் வேறு சில கமிட்மென்ட்கள் காரணமாக படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. சூரரைப் போற்று படத்திற்கு பிறகு இயக்குனர் சுதா கொங்கராவுடன் இவர் நடிக்கும் இரண்டாவது படம் என்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த வருடம் ஜூன் மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் முடியும் என படக்குழு திட்டமிட்டுள்ளது. அதன் பிறகு வெற்றி மாறனின் வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பு தொடரும் என கூறப்படுகிறது. இதனால் இப்படத்தின் காத்திருப்பு மேலும் நீட்டிக்கப்படுகிறது.