LOADING...
கார்த்தியின் 'வா வாத்தியார்' திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகாது; ரிலீஸ் அப்டேட் கொடுத்த படக்குழு
கார்த்தியின் 'வா வாத்தியார்' திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகாது

கார்த்தியின் 'வா வாத்தியார்' திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகாது; ரிலீஸ் அப்டேட் கொடுத்த படக்குழு

எழுதியவர் Sekar Chinnappan
Sep 01, 2025
12:10 pm

செய்தி முன்னோட்டம்

நடிகர் கார்த்தி, சூது கவ்வும் படப்புகழ் இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் நடித்து வரும் வா வாத்தியார் திரைப்படம், தீபாவளிக்கு வெளியாகும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது டிசம்பர் மாதம் வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோ க்ரீன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது கார்த்தி ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கைதி மற்றும் சர்தார் படங்களைப் போலவே வா வாத்தியார் திரைப்படமும் தீபாவளி நேரத்தில் வெளியாகி, பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். இந்நிலையில், படம் தீபாவளிக்கு வெளியாகாதது சோகத்தை ஏற்படுத்தினாலும், படம் இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியாகும் என்பது அவர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.

தீபாவளி போட்டி

கங்குவா தோல்வியால் தீபாவளி போட்டியைத் தவிர்த்த ஸ்டுடியோ க்ரீன்

ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம், சூர்யாவின் கங்குவா திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாத நிலையில், வா வாத்தியார் திரைப்பட வெளியீட்டை தாமதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. தற்போது, உறுதியான வெளியீட்டுத் தேதியைக் குறிப்பிடாமல், டிசம்பர் மாதம் படம் வெளியாகும் என்று மட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, இந்த ஆண்டு தீபாவளிக்கு பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே மற்றும் டூட், துருவ் விக்ரமின் பைசன் மற்றும் ஹரிஷ் கல்யாணின் டீசல் உள்ளிட்ட படங்கள் வெளியாக உள்ளன. வா வாத்தியார் திரைப்படமும் இந்தப் பட்டியலில் சேரும் என்று எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு, இந்த அறிவிப்பு ஏமாற்றமளித்துள்ளது. எனினும், கிறிஸ்துமஸ் விடுமுறையை இலக்காகக் கொண்டு படம் வெளியாகும் பட்சத்தில், அதுவும் மிகப்பெரிய வசூல் சாதனையை நிகழ்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ட்விட்டர் அஞ்சல்

ஸ்டுடியோ க்ரீன் அறிவிப்பு