LOADING...
நடிகர் தனுஷின் குபேரா படத்தின் டிரெய்லர் வெளியானது

நடிகர் தனுஷின் குபேரா படத்தின் டிரெய்லர் வெளியானது

எழுதியவர் Sekar Chinnappan
Jun 16, 2025
07:31 am

செய்தி முன்னோட்டம்

சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகார்ஜுனா மற்றும் ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள குபேரா திரைப்படத்தின் டிரெய்லர் ஹைதராபாத்தின் ஜே.ஆர்.சி கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்ற ப்ரீ-ரிலீஸ் ஈவண்ட்டில் வெளியிடப்பட்டது. இந்த படம் ஜூன் 20 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. தமிழ் மட்டுமல்லாது, தெலுங்கு மற்றும் இந்தியிலும் இந்த படம் நேரடியாக வெளியாக உள்ளது. இந்தியில் தனுஷ் ஏற்கனவே படம் நடித்துள்ள நிலையில், குபேரா படம் மூலம் தெலுங்கு சினிமாவிலும் அறிமுகமாகிறார். பணம், அதிகாரம் மற்றும் சதி ஆகிய கருப்பொருள்களை மையமாகக் கொண்ட அரசியல் ரீதியாக தீவிரமான த்ரில்லர் படமாக இது இருக்கும் என டிரெய்லரைப் பார்க்கும்போது தெரிகிறது.

தாமதம்

ப்ரீ-ரிலீஸ் ஈவண்ட்

முன்னதாக, இந்த படத்தின் ப்ரீ-ரிலீஸ் ஈவண்ட் ஜூன் 13ஆம் தேதி திட்டமிடப்பட்டிருந்த நிலையில், அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்தால் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மேலும், படத்தின் டிரெய்லர் வெளியீடு ஜூன் 14 அன்று திட்டமிடப்பட்டிருந்த நிலையில், அதுவும் ஒத்திவைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இரண்டும் ஒரே நாளில் ஒன்றாக நடத்த முடிவு செய்யப்பட்டு ஞாயிற்றுக்கிழமை ஹைதராபாத்தில் நடந்துள்ளது. இதற்கிடையே, வித்தியாசமான கதைசொல்லலுக்கு பெயர் பெற்ற சேகர் கம்முலா இயக்கத்தில் தயாராகி உள்ள குபேரா நல்ல வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேவி ஸ்ரீ பிரசாத்தின் பின்னணி இசையும் குறிப்பாக படத்திற்கு வலு சேர்ப்பதாக உள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

நடிகர் தனுஷின் எக்ஸ் தள பதிவு