LOADING...
தனுஷ்- ஜூனியர் என்டிஆரை இயக்கப்போகும் வெற்றிமாறன்; இரண்டு பாகமாக எடுக்கப்போவதாக செய்தி
உருவாகப்போகிறதா வெற்றிமாறன்-தனுஷ்-ஜூனியர் என்டிஆர் காம்போ ?

தனுஷ்- ஜூனியர் என்டிஆரை இயக்கப்போகும் வெற்றிமாறன்; இரண்டு பாகமாக எடுக்கப்போவதாக செய்தி

எழுதியவர் Venkatalakshmi V
Feb 06, 2023
07:30 pm

செய்தி முன்னோட்டம்

இயக்குனர் வெற்றிமாறன், விரைவில் தனுஷ் மற்றும் ஜூனியர் என்டிஆரை வைத்து ஒரு படம் இயக்கவுள்ளார் என்று செய்திகள் கூறுகின்றன. இந்த படம் இரண்டு பாகமாக வெளியாகும் எனவும் கூறப்பட்டுள்ளது. தற்போது விடுதலை படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் பிசியாக இருக்கிறார் வெற்றிமாறன். இதை தொடர்ந்து, சூர்யாவின் வாடிவாசல் படத்தின் வேலைகள் தொடங்கப்படும். அதன் பிறகு, மேற்கூறிய படத்தின் வேலைகள் ஆரம்பிக்கப்படுமென ஊடக செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன. மேலும், 3 கதைகளை வெற்றிமாறன், NTR-இடம் கூறியதாகவும், அதில் இந்த இரண்டு பாக கதையை அவர் தேர்வு செய்ததாகவும் செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன. மறுபுறம், தனுஷிற்கு 'வாத்தி' படத்தின் ரிலீஸ், தொடர்ந்து, 'கேப்டன் மில்லர்' மற்றும் இயக்குனர் சேகர் கம்முலாவுடன் படம் என வரிசையாக இருக்கிறது.

ட்விட்டர் அஞ்சல்

வெற்றிமாறன்-தனுஷ்-ஜூனியர் என்டிஆர் காம்போ