
பிப்ரவரி 4, பிரமாண்டமாக நடைபெறப்போகும் 'வாத்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா
செய்தி முன்னோட்டம்
தனுஷ் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில், தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகியுள்ள படம் 'வாத்தி'.
இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில், தற்போது வரை வெளியான பாடல்கள் அனைத்தும், ஹிட் ரகம்.
இந்நிலையில் படத்தின் மற்ற பாடல்கள் குறித்தும், இசை வெளியீட்டு விழா குறித்தும், ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த நிலையில், அது குறித்து தற்போது ஒரு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அதன்படி, வரும் பிப்ரவரி 4-ஆம் தேதி, இசை வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது. இந்த அறிவிப்பையே ஒரு வீடியோ வடிவில் வெளியிட்டுள்ளனர் படக்குழு.
இந்த படத்தில், தனுஷிற்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடித்துள்ளார். வரும் பிப்ரவரி 17 , இப்படம் திரைக்கு வரவிருக்கிறது.
ட்விட்டர் அஞ்சல்
'வாத்தி ' படத்தின் இசை வெளியீட்டு விழா
Let the celebration begin 🎉
— Sithara Entertainments (@SitharaEnts) February 1, 2023
நம்ம #வாத்தி வரார் 🔥#Vaathi Grand Audio Launch on 4th Feb 🥳#VaathiVaraar 🕺@dhanushkraja #VenkyAtluri @iamsamyuktha_ @gvprakash @dopyuvraj @NavinNooli @vamsi84 #SaiSoujanya @SitharaEnts @Fortune4Cinemas @7screenstudio @adityamusic pic.twitter.com/yCY3J3Pc7N