Page Loader
தனுஷின் 'வாத்தி' படத்தின் இயக்குனர் வெங்கி அட்லூரியின் கோலாகல திருமணம்; பிரபலங்கள் வாழ்த்து
'வாத்தி' இயக்குனர் வெங்கி அட்லூரியின் திருமண வைபவம்

தனுஷின் 'வாத்தி' படத்தின் இயக்குனர் வெங்கி அட்லூரியின் கோலாகல திருமணம்; பிரபலங்கள் வாழ்த்து

எழுதியவர் Venkatalakshmi V
Feb 02, 2023
04:30 pm

செய்தி முன்னோட்டம்

வெளிவரவிருக்கும் தனுஷின் 'வாத்தி' படத்தின் இயக்குனர் வெங்கி அட்லூரிக்கு நேற்று (பிப்.1 ) ஹைதராபாதில் திருமணம் நடைபெற்றது. நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்ட இந்த திருமண நிகழ்வின் புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளது. திருமணத்தில் பங்கு பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ், புகைப்படத்தை பகிர்ந்ததோடு மட்டுமல்லாமல், தனது வாழ்த்தையும் தெரிவித்து இருந்தார். கீர்த்தி சுரேஷுடன், தெலுங்கு பட ஹீரோவான, நிதின், அவரது மனைவி ஷாலினி மற்றும் பல திரையுலக பிரபலங்களும் கலந்து கொண்டனர். வெங்கியின் இயக்கத்தில், கீர்த்தி சுரேஷ் 'ரங் தே' என்ற படத்தில் நடித்துள்ளார். வெங்கி தற்போது இயக்கி வரும் 'வாத்தி' படம், இம்மாதம் 17-ஆம் தேதி வெளிவரவிருக்கிறது.

ட்விட்டர் அஞ்சல்

வெங்கி அட்லூரியின் திருமண வைபவம்