தனுஷின் 'வாத்தி ' படத்தின் அடுத்த பாடலான 'நாடோடி மன்னன்' வெளியானது
தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் 'வாத்தி' படத்தின், அடுத்த பாடலான 'நாடோடி மன்னன்', இன்று (ஜனவரி 17 ) மாலை வெளியானது. தெலுங்கு இயக்குனரான வெங்கி ஆட்லுரியின் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் இசையமைப்பாளர், ஜி.வி. பிரகாஷ் ஆவர். ஸ்வேதா மோகன் குரலில் வெளியான இப்படத்தின் முதல் பாடலான 'வா வாத்தி', ஏற்கனவே வரவேற்பை பெற்றுள்ளது. இந்த 'நாடோடி மன்னன்' பாடலை, அந்தோணிதாசன் பாடியுள்ளார். வரிகளை எழுதியவர் யுகபாரதி. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி உள்ள இந்த படத்தில், தனுஷிற்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடித்துள்ளார். வாத்தி திரைப்படம், பிப்ரவரி 17 அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் OTT உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது.