
சிறந்த பாடலுக்கான 'கோல்டன் குளோப்ஸ்' விருதை தட்டி சென்ற 'நாட்டு கூத்து' பாடல்
செய்தி முன்னோட்டம்
இந்திய திரையுலகத்திற்கு பெருமை சேர்க்கும் விதமாக, ராஜமௌலியின் RRR திரைப்படத்தின் 'நாட்டு கூத்து' பாடல், கோல்டன் க்ளோப் விருதை வென்றுள்ளது. இந்த விருதை பெறும் முதல் இந்திய திரைப்படம் இதுவாகும்.
சிறந்த பாடல் பிரிவில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதை, அந்த படத்தின் இசை அமைப்பாளர் M.M கீரவாணி பெற்றுக்கொண்டார்.
அவருடன், அந்த விருது வழங்கும் விழாவில்,அந்த திரைப்படத்தின் இயக்குனர் ராஜமௌலி, படத்தின் கதாநாயகர்கள் ஜூனியர் NTR மற்றும் ராம் சரண் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இந்த விருதுக்காக பரிந்துரைக்க பட்ட மேலும் சில பாடல்கள்: கரோலினாவுக்காக டெய்லர் ஸ்விஃப்ட், லேடி காகா, பெஞ்சமின் ரைஸ் (டாப் கன்: மேவரிக்), ரியான் கூக்லர் (பிளாக் பாந்தர்: வகாண்டா ஃபாரெவர்) மற்றும் பல.
ட்விட்டர் அஞ்சல்
RRR திரைப்படத்திற்கு மேலும் ஒரு விருது
M. M. Keeravani wins the award for Best Original Song in a Motion Picture at the #GoldenGlobes. pic.twitter.com/BRzSbFZLuZ
— NBC Entertainment (@nbc) January 11, 2023
மேலும் படிக்க
விருதுகளை குவிக்கும் RRR
RRR திரைப்படம் மேலும் பல சர்வதேச விருதுகளையும் பெற்றுள்ளது.
1,200 கோடிகளை உலகளவில் வசூல் செய்த இந்த திரைப்படம், நியூயார்க் திரைப்பட விமர்சகர்கள் வட்ட விருதுகளில், சிறந்த இயக்குனருக்கான விருதை வென்றது.
ஆஸ்கார் விருதின் பரிசீலனை பட்டியலில், இந்தியாவின் சார்பில் இந்த திரைப்படமும் இடம் பெற்றுள்ளது.
மேலும், பல்வேறு பிரிவுகளின் கீழ் அகாடமி விருதுகளுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
இந்த கோல்டன் க்ளோப் விருதுக்கு, சிறந்த பாடல் மற்றும் சிறந்த ஆங்கிலம் அல்லாத திரைப்படம் என இரண்டு பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டது.
எனினும், சிறந்த ஆங்கிலம் அல்லாத திரைப்படம் பிரிவில், அர்ஜென்டினா திரைப்படமான 'அர்ஜென்டினா 1985 ' வென்றது.