
நியூயார்க் ஃபிலிம் கிரிட்டிக்ஸ் சர்க்கிள் விருது விழாவில் இயக்குனர் ராஜமௌலி; குவியும் பாராட்டுக்கள்
செய்தி முன்னோட்டம்
ராஜமௌலி இயக்கத்தில் பிரம்மாண்ட செலவில் உருவான திரைப்படம் RRR ஆகும்.
இந்த படம் 2022-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 24-ந்தேதி பெரும் எதிர்ப்பார்ப்புடன் உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியானது.
இந்த படத்தில் N. T. ராமாராவ் ஜூனியர், ராம் சரண், அஜய் தேவ்கன், அலியா பட், ஷ்ரியா சரண், சமுத்திரக்கனி போன்றோர் நடித்துள்ளனர்.
இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வசூல் சாதனை செய்தது.
இந்த வருடம் ஆஸ்கார் விருதுக்கு இந்தியாவின் சார்பில் இந்த படம் அனுப்பப்படும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.
ஆனால் இந்த போட்டிக்கு செல்லோ ஷோ எனும் குஜராத்தி படம் தேர்வானது.
இதனையடுத்து RRR படக்குழுவின் தனிப்பட்ட முயற்சியில் 15 பிரிவுகளில் இந்த படத்தை ஆஸ்கார் விருதுக்கு விண்ணப்பித்தனர்.
விருது
சிறந்த இயக்குனருக்கான விருதை பெற்றார் ராஜமௌலி
சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் RRR படத்தின் நாட்டு கூத்து பாடல் இறுதி பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இறுதி நாமினேஷன் பட்டியல் வருகிற 24-ந்தேதி வெளியாகிறது.
இதுமட்டுமின்றி ஆஸ்கருக்கு இணையாக கருதப்படும் கோல்டன் க்ளோப் விருதுக்கு இப்படம் தேர்வானது.
ஆங்கிலம் அல்லாத வேற்று மொழி படத்துக்கான பிரிவில் தேர்வாகி உள்ளது.
மேலும் நியூயார்க் பிலிம் கிரிட்டிக்ஸ் சர்க்கிள் விருது வழங்கும் விழா நியூயார்க்கில் நடைபெற்று கொண்டிருக்கிறது.
இதில் சிறந்த இயக்குனருக்கான பிரிவில் ராஜமௌலி அவர்கள் தேர்வாகி உள்ளார்.
இந்த விழாவிற்கு தனது மனைவியுடன் கலந்து கொண்ட ராஜமௌலி, சிறந்த இயக்குனருக்கான விருதினை பெற்று மேடையில் பேசி கைதட்டும் வாங்கினார்.
தற்போது இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு அனைவரது பாராட்டையும் பெற்று வருகிறது.
ட்விட்டர் அஞ்சல்
வைரலாகும் ராஜமௌலியின் வீடியோ
❤️🔥❤️🔥❤️🔥 SS RAJAMOULI 💥💥💥pic.twitter.com/kCq3TVX5nY
— RRR Movie (@RRRMovie) January 5, 2023