NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஆருத்ரா மோசடி வழக்கு - சிறப்பு நீதிமன்றத்தினை நாட ஆர்.கே.சுரேஷுக்கு உத்தரவு
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஆருத்ரா மோசடி வழக்கு - சிறப்பு நீதிமன்றத்தினை நாட ஆர்.கே.சுரேஷுக்கு உத்தரவு
    ஆருத்ரா மோசடி வழக்கு - சிறப்பு நீதிமன்றத்தினை நாட ஆர்.கே.சுரேஷுக்கு உத்தரவு

    ஆருத்ரா மோசடி வழக்கு - சிறப்பு நீதிமன்றத்தினை நாட ஆர்.கே.சுரேஷுக்கு உத்தரவு

    எழுதியவர் Nivetha P
    Sep 27, 2023
    07:23 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழகத்தில் சென்னை-அமைந்தகரையை தலைமையிடமாக கொண்டு திருவள்ளூர், திருவண்ணாமலை, போன்ற பல இடங்களில் ஆருத்ரா கோல்டு டிரேடிங் பிரைவேட் லிமிடெட் என்னும் நிறுவனம் செயல்பட்டு வந்தது.

    இந்நிறுவனத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் மாதம் ரூ.36ஆயிரம் வட்டி வழங்கப்படும் என்ற மோசடி விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.

    இதனை நம்பிய வாடிக்கையாளர்களான கிட்டத்தட்ட ஒரு லட்சத்து 9,255 பேரிடம் இந்நிறுவனம் ரூ.2,438 கோடி பெற்று மோசடி செய்தது.

    இதனால் பாதிக்கப்பட்டோர் குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் அளித்தனர்.

    அதன்பேரில், 21 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது, 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இதனிடையே இந்த வழக்கில் நடிகரும், பாஜக ஓபிசி-பிரிவு தலைவருமான ஆர்.கே.சுரேஷ்க்கு சம்மந்தம் இருப்பதாக தெரியவந்தது.

    இதனால் அவரது வங்கிக்கணக்குகளை முடக்கி பொருளாதாரக்குற்றப்பிரிவு காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டது.

    வழக்கு 

    நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது 

    இந்நிலையில் இந்த நடவடிக்கைக்கு எதிராக ஆர்.கே.சுரேஷ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

    அதன்படி இதுகுறித்த விசாரணை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னர் வந்த நிலையில், தனக்கும் இந்த மோசடி வழக்குக்கும் சம்மந்தமில்லை.

    வங்கி கணக்குகள் முடக்கப்பட்டதால் தாம் பெரும் பாதிப்பிற்குள்ளாகி இருப்பதாக வாதாடப்பட்டுள்ளது.

    இதனை தொடர்ந்து வங்கிக் கணக்கு முடக்கம் குறித்த ஆவணங்கள் அனைத்தும் சிறப்பு நீதிமன்றத்தில் தமிழ்நாடு முதலீட்டாளர்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று காவல்துறை சார்பில் கூறப்பட்டுள்ளது.

    இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, இந்த வழக்கு தொடர்பாக தமிழ்நாடு முதலீட்டாளர்கள் பாதுகாப்பு சட்ட நீதிமன்றத்தினை நாடும்படி ஆர்.கே.சுரேஷ் தரப்பிற்கு அறிவுறுத்தி வழக்கினை முடித்து வைத்தார் என்பது குறிப்பிடவேண்டியவை ஆகும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    தமிழ்நாடு
    கைது
    வங்கிக் கணக்கு

    சமீபத்திய

    பொள்ளாச்சி பாலியல் வழக்கு: 9 பேருக்கும் சாகும் வரை சிறை தண்டனை விதிப்பு பொள்ளாச்சி
    இந்தியாவில் தனது ரே-பான் ஸ்மார்ட் கண்ணாடிகளை அறிமுகப்படுத்துகிறது மெட்டா; அதன் விலை என்ன? மெட்டா
    CBSE +2 வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது; மாணவர்களை விட மாணவிகள் முன்னிலை சிபிஎஸ்இ
    ஜம்மு-காஷ்மீரின் ஷோபியனில் லஷ்கர் தீவிரவாதிகளுக்கும் இந்திய ராணுவத்தினருக்கும் இடையே மோதல்; ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொலை ஜம்மு காஷ்மீர்

    சென்னை

    சென்னைக்கு நாளை உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் ஓணம்
    சென்னையில் நடைபெற்ற ஜவான் இசைவெளியீட்டு விழா சிறப்பம்சங்கள்  இசை வெளியீடு
    சென்னை மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு, பயணிகள் அவதி  மெட்ரோ
    ரத்த அழுத்தம், இதயத்துடிப்பை கண்காணிக்கும் நவீன மோதிரம்: முன்னாள் IIT மாணவர்கள் சாதனை ஐஐடி

    தமிழ்நாடு

    தமிழ்நாட்டில் நிபா வைரஸ் தாக்கம் இதுவரை கண்டறியப்படவில்லை - மா.சுப்பிரமணியம் டெங்கு காய்ச்சல்
    5 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை  புதுச்சேரி
    திமுக முப்பெரும் விழாவையொட்டி முதல்வர் இன்று வேலூர் பயணம்  திமுக
    பொது இடங்களில் இரத்த தான மையம், பள்ளி மாணவர்களின் அசத்தல் கண்டுபிடிப்பு விருதுநகர்

    கைது

    திருச்சியை உறையவைத்த லலிதா ஜுவல்லரி கொள்ளை சம்பவம், பாகம் 1 - க்ரைம் ஸ்டோரி க்ரைம் ஸ்டோரி
    செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு - நீதிமன்றம் உத்தரவு  நீதிமன்ற காவல்
    மணிப்பூர் கலவரம் - வழக்கு விசாரணை சிபிஐ'க்கு மாற்றம்  சிபிஐ
    என்.எல்.சி.க்கு எதிர்ப்பு தெரிவித்து முற்றுகை போராட்டம் - அன்புமணி ராமதாஸ் கைது  பாமக

    வங்கிக் கணக்கு

    நாடு முழுவதும் 30, 31ம் தேதி வங்கிகள் ஸ்டிரைக்? ஊழியர்களின் கோரிக்கை என்ன? இந்தியா
    சத்தமில்லாமல் கூகுள் பே, போன்பே-விற்கு கட்டணம் வசூலிக்கும் வங்கிகள்; முழு விபரம்! தொழில்நுட்பம்
    டெபாசிட் வட்டியை உயர்த்திய பஞ்சாப் நேஷனல் வங்கி! இந்தியா
    விவசாயிகளுக்கான கிசான் கிரெடிட் கார்டு திட்டம்! 4% வட்டி விகிதம் தொழில்நுட்பம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025