Page Loader
சென்னையில் நடைபெற்ற ஜவான் இசைவெளியீட்டு விழா சிறப்பம்சங்கள் 
ஜவான் இசைவெளியீட்டு விழா சிறப்பம்சங்கள்

சென்னையில் நடைபெற்ற ஜவான் இசைவெளியீட்டு விழா சிறப்பம்சங்கள் 

எழுதியவர் Venkatalakshmi V
Aug 31, 2023
08:36 am

செய்தி முன்னோட்டம்

இயக்குனர் அட்லீ முதல்முறையாக பாலிவுட் திரைப்படத்தை இயக்கியுள்ளார். அதுவும், பாலிவுட்டின் டாப் நடிகரான ஷாருக்கானை ஹீரோவாக வைத்து இயக்கியுள்ளார். 'ஜவான்' என பெயரிடப்பட்டுள்ள அந்த படத்தின் பாடத்தின் மூன்று பாடல்கள் ஏற்கனவே வெளியாகி, வைரலாகி வருகிறது. அனிருத் இசையில் உருவான இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா, நேற்று இரவு சென்னையில் நடைபெற்றது. 'ஜவான்' திரைப்படத்தின் 'ப்ரீ-ரிலீஸ்' ஈவென்ட்டாக கருதப்படும் இந்த இசை வெளியீட்டு விழாவிற்கு, படத்தின் நாயகன் ஷாருக்கான் வருகை தந்திருந்தார். ஒரு ஹிந்தி படத்திற்கு, சென்னையில் இசை வெளியீட்டு விழா நடப்பது இதுவே முதல்முறை ஆகும். இந்த விழாவில் நடைபெற்ற சில சிறப்பம்சங்கள் இதோ உங்களுக்கு:

card 2

ஆடியோ மெசேஜ் மூலம் வாழ்த்துக்கள் சொன்ன கமல்ஹாசன்

நேற்று மாலை, சாய்ராம் கல்லூரியில் விழா நடைபெற்றது. ஷாருக்கான், விஜய் சேதுபதி, ப்ரியாமணி, யோகி பாபு என பலர் கலந்து கொண்டனர். நடிகர் ஷாருக்கான், விஜய் சேதுபதியையும், அனிருத்தையும் கட்டி அணைத்து, முத்தமிட்டு தனது நன்றிகளை பகிர்ந்து கொண்டார். தொடர்ந்து, அனிருத் மேடையில் பாட, அவருடன் சேர்ந்து நடனமாடி மகிழ்ந்தார் ஷாருக்கான். படத்தின் நாயகி நயன்தாரா, தான் கொண்ட கொள்கை காரணமாக படத்தின் விழாவில் கலந்துகொள்ளவில்லை. 'தளபதி' விஜய் கலந்து கொள்வார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 'உலகநாயகன்' கமல் ஹாசன், ஆடியோ மெசேஜ் மூலம் தனது வாழ்த்துக்களை படக்குழுவினருடன் பகிர்ந்து கொண்டார். மேடையில் பேசும்போது, இயக்குனர் அட்லீ, இந்த படம் அமைவதற்கு காரணமே, நடிகர் விஜய் தான் என பெருமிதமாக கூறினார்.