மணிப்பூர் கலவரம் - வழக்கு விசாரணை சிபிஐ'க்கு மாற்றம்
மணிப்பூர் மாநிலத்தில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி என்னும் சமூகத்தினை சேர்ந்தோருக்கு பழங்குடியினர் அந்தஸ்து வழங்க எதிர்ப்பு தெரிவித்து குகி பழங்குடியின மக்கள் போராட்டம் துவங்கிய நிலையில், அது கலவரமாக கடந்த 2 மாதங்களாக தொடர்ந்து நடந்து வருகிறது. இதனிடையே குகி பழங்குடியினத்தினை சேர்ந்த 2 பெண்களை நிர்வாணப்படுத்தி கலவரக்காரர்கள் ஊர்வலமாக அழைத்து சென்றதோடு, பாலியல் வன்கொடுமையும் செய்துள்ளனர். இது குறித்த வீடியோ இணையத்தில் வெளியான நிலையில், இந்த சம்பவம் உலகம் முழுவ்தும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் இது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம், மணிப்பூர் மாநில அரசுடன் ஆலோசனை நடத்தியது. அதன்படி இந்த வழக்கின் விசாரணையினை சிபிஐ விசாரிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கிறது.
மணிப்பூருக்கு வெளியே இவ்வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றத்தில் பிராமண பத்திரிக்கைகள் தாக்கல்
அதனை தொடர்ந்து, இந்த கொடூர வீடியோவினை எடுத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதோடு அவரது போனும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், உச்சநீதிமன்றத்தில் மணிப்பூருக்கு வெளியே இந்த வழக்கினை விசாரிக்க மத்திய அரசு பிராமண பத்திரிக்கைகளை தாக்கல் செய்துள்ளது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த விவகாரம் குறித்து 7வது இதனை சிபிஐ விசாரிக்க உள்ளனர். அதேபோல் குகி மற்றும் மைதேயி பழங்குடியின மக்களுடன் மத்திய அரசு 6 கட்ட அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. தொடர்ந்து இந்த கலவரத்தில் இதுவரை 147 பேர் மரணமடைந்துள்ள நிலையில், தற்போது 3,500 பாதுகாப்பு படையினர் அப்பகுதிகளில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அங்குள்ள மக்களுக்கு உணவு மற்றும் மருந்துகள் அனைத்தும் எவ்வித தடையும் இல்லாமல் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.