Page Loader
சென்னை மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு, பயணிகள் அவதி 
சென்னை மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு

சென்னை மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு, பயணிகள் அவதி 

எழுதியவர் Venkatalakshmi V
Aug 31, 2023
10:52 am

செய்தி முன்னோட்டம்

சென்னையில் மெட்ரோ ரயில் சேவை பலருக்கும் ஒரு வரப்பிரசாதம். போக்குவரத்து நெரிசலில் சிக்காமல், வேகமாகவும், வெயிலில் அவஸ்தை படாமல் பிரயாணம் செய்யவும் ஏற்றது இந்த மெட்ரோ ரயில். சென்னையின் பல முக்கிய இடங்களை இணைக்கும் இந்த மெட்ரோ, தற்போது நீலம் மற்றும் பச்சை என இரண்டு வழித்தடங்களில் இயங்குகிறது. அதில், இன்று காலை, விம்கோ நகர் - சென்னை விமான நிலையம் வழித்தடத்தில், கிண்டி மெட்ரோ அருகே கோளாறு ஏற்பட்டுள்ளது. அதனால் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, வண்ணாரப்பேட்டை மற்றும் விம்கோ பணிமனை வரை செல்லும் பயணிகள், கோயம்பேடு சென்று மாறி கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டதால், சென்னை MGR சென்ட்ரல் ரயில் நிலையத்தில், கல்லூரி மற்றும் அலுவலகங்களுக்கு செல்லும் பொதுமக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

ட்விட்டர் அஞ்சல்

பொதுமக்கள் கூட்டம்