
பொள்ளாச்சி பாலியல் வழக்கு: 9 பேருக்கும் சாகும் வரை சிறை தண்டனை விதிப்பு
செய்தி முன்னோட்டம்
தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வை ஏற்படுத்திய பொள்ளாச்சி பாலியல் துன்புறுத்தல் வழக்கில் இன்று (மே 13) கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
அதன்படி, குற்றம் சாட்டப்பட்ட 9 பேருமே குற்றவாளிகள் என தீர்ப்பளித்துள்ளது.
ஒன்பது பேருக்கும் சாகும் வரை சிறை தண்டனையை அறிவித்துள்ளது.
அதோடு, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மொத்தமாக ரூ. 85 லட்சம் இழப்பீடு வழங்கவும் மாவட்ட சட்ட உதவி மையத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதனால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு பெண்ணிற்கும் 10-15 லட்சம் வரை இழப்பீடு கிடைக்கும்.
இது குறித்து CBI சார்பில் வாதாடிய வழக்கறிஞர், வலுவான ஆதாரங்கள் இருப்பதால், மேல்முறையீடு சென்றாலும் குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட தண்டனை உறுதி செய்யப்படும் என்றார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#WATCH | "மேல்முறையீடு செய்தாலும் தண்டனை உறுதி"
— Sun News (@sunnewstamil) May 13, 2025
சிபிஐ தரப்பு வழக்கறிஞர் சுரேந்திர மோகன் தகவல்#SunNews | #PollachiCase | #PollachiVerdict pic.twitter.com/hA8XP6EvQm
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#Watch | பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட தண்டனைகள் என்னென்ன?
— Sun News (@sunnewstamil) May 13, 2025
சிபிஐ தரப்பு வழக்கறிஞர் சுரேந்திர மோகன் பேட்டி.#SunNews | #PollachiCase | #Kovai pic.twitter.com/8SgTUEKxfB