
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு - நீதிமன்றம் உத்தரவு
செய்தி முன்னோட்டம்
சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில், அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி கடந்த ஜூலை 17ம் தேதி காவேரி மருத்துவமனையிலிருந்து புழல் சிறைக்கு மாற்றப்பட்டார்.
இவருக்கு இன்று(ஜூலை.,26)வரை நீதிமன்ற காவல் பிறப்பிக்கப்பட்டிருந்ததன்படி இன்றோடு இவரின் நீதிமன்றக்காவல் முடிவடைகிறது. இதனால் செந்தில் பாலாஜி இன்று காணொளிக்காட்சி மூலம் சென்னை முதன்மை நீதிமன்ற அமர்வு நீதிபதி அல்லி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது ஆதாரங்கள் இல்லாமல் சந்தேகத்தின்பேரில் கைது செய்வது போல் அமலாக்கத்துறை கைது நடவடிக்கையினை மேற்கொள்ளமுடியாது என்று செந்தில் பாலாஜி தரப்பில் வாதாடப்பட்டது.
இதனையடுத்து நீதிபதி அல்லி,"காவலை எதிர்த்து தான் மனுத்தாக்கல் செய்திருக்கவேண்டும். ஆட்கொணர்வு மனுவினைத்தாக்கல் செய்திருக்கக்கூடாது" என்று தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து, செந்தில் பாலாஜிக்கு வரும் ஆகஸ்ட் 8ம் தேதி வரை நீதிமன்ற காவலினை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
செந்தில் பாலாஜி வழக்கு
செந்தில் பாலாஜிக்கு காவல் நீட்டிப்பு
— Thanthi TV (@ThanthiTV) July 26, 2023
அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு ஆகஸ்ட் 8ம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு
சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை வழக்கில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு
இன்றுடன் காவல் முடிந்த நிலையில், புழல் சிறையில் இருந்து காணொலி வாயிலாக செந்தில்பாலாஜி… pic.twitter.com/Kov56JPS5a