சத்தமில்லாமல் கூகுள் பே, போன்பே-விற்கு கட்டணம் வசூலிக்கும் வங்கிகள்; முழு விபரம்!
இன்றைய நவீன காலக்கட்டத்தில் ஆன்லைன் பரிவர்த்தனைகள் மக்களிடையே அதிகரித்துள்ளது. எந்த ஒரு பொருளை வாங்கினாலுமே ஆன்லைன் பரிவர்த்தனையை மட்டுமே மேற்கொள்கிறார்கள். அதிலும், முன்னணி வகிப்பது PAYTM, AMAZONPAY, PHONEPE, GOOGLE PAY போன்ற செயலிகள் தான். இதனிடையே, 90 முறைக்கு மேல் PHONEPE, GOOGLE PAY போன்ற UPI பேமெண்ட் முறைகளைப் பயன்படுத்தினால், கட்டணம் செலுத்த வேண்டும் என்ற தகவல் பேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப்பில் ஒரு முன்னெச்சரிக்கை பதிவு என்று வைரலாகி வருகிறது. அதன்படி, இந்த புதிய மாற்றத்தால் அனைத்து வங்கிகளும் இந்த வரியை மேற்கொள்ளவில்லை. சில வங்கிகள் தான் கட்டணம் வசூலிக்கின்றன. இதற்கு பெயர் portfolio charges என்று சொல்கிறார்கள்.
கூகுள் பே, போன்பே போன்ற யூபிஐகளுக்கு கட்டணம் எவ்வளவு வசூலிக்கப்படுகிறது?
ஆறு மாதத்துக்குள் 90 முறைக்கு மேல் கட்டணம் 90 முறை இலவசமாக பயன்படுத்தினாலுமே, 91 வது முறை UPI மூலம் பணம் செலுத்த ரூ. 2.25 + வரி பிடிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. அதில், ஒவ்வொரு பண பரிவர்த்தனைக்கும், ரூ. 2.65 பிடிக்கப்படும் எனக்கூறப்படுகிறது. அந்த வகையில், நீங்கள், 6 மாதத்தில் 90 முறைக்கு மேல் UPI மூலம் பணம் செலுத்தி இருந்தால், 91 வது முறையில் இருந்து, கட்டணமாக, ரூ. 2.25+ஜிஎஸ்டி வரி பிடிக்கிறார்கள் எனவும் கூறப்படுகிறது.