Page Loader
Google Meetக்கான புதிய அப்டேட்: 360 டிகிரியுடன் சிறப்பான அம்சம்
கூகுள் மீட்டில் எமோஜியுடன் வரும் புதிய அப்டேட்

Google Meetக்கான புதிய அப்டேட்: 360 டிகிரியுடன் சிறப்பான அம்சம்

எழுதியவர் Siranjeevi
Jan 13, 2023
03:27 pm

செய்தி முன்னோட்டம்

கடந்த சில நாட்களாகவே Google Meet சிறப்பாக செயல்பட்டு வருகிறது. வீடியோ கால் மற்றும் கான்ஃபரன்ஸ் அழைப்புகளை இனி வேடிக்கையாக மாற்ற எமோஜிகளை பயன்படுத்த உள்ளது. இது அழைப்பு முழுவதும் டிஸ்ப்ளேவின் இடது பக்கத்தில் காட்டப்படும். இதன் மூலம் யார் என்ன ரியாக்‌ஷன் கொடுத்துள்ளார்கள் என்பதை எளிதில் காணலாம். மேலும், Google Meetல், உங்கள் வீடியோவின் பின்னணியாகச் செயல்படும் வால்பேப்பரைப் பயன்படுத்தி பின்னணியை மாற்றலாம் என்பது உங்களுக்குத் தெரியும். இப்போது, ​​இந்த அம்சம் அதிவேகமாக செயல்பட்டு வருகிறது., இருப்பினும், இது துல்லியமாக இல்லாமலும், செயற்கை வடிவமைத்தல் போன்ற அமைப்பிலும் இருந்தது. ஆனால், வரப்போகும் 360 டிகிரி பின்னணி அமைப்பு அந்தச் சிக்கல்களைச் சரிசெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Google Meet புதிய அப்டேட்

Google Meet இன் 360 டிகிரி பின்னணி எவ்வாறு செயல்படும்?

கூகுளின் அறிக்கைப்படி, 360 டிகிரி பின்னணி வீடியோக்களையும் மொபைலின் கைரோஸ்கோப்பையும் ஒருங்கிணைக்கிறது, இது மொபைலின் திசையை தீர்மானிக்கிறது. கூகுள், புதிய 360 டிகிரி பின்னணியை வரும் நாட்களில் வெளியிட உள்ளது. இந்த அம்சம் முதலில் ஆண்ட்ராய்டு மற்றும் iOS இயங்குதளங்களில் நுகர்வோர் மற்றும் பணம் செலுத்தும் பயனர்களுக்கு வரும். ஆண்ட்ராய்டு மற்றும் iOS இரண்டிலும் Google Duo ஆப்ஸ் இப்போது Meet ஆகக் கிடைக்கிறது. ஜனவரி 17 முதல், Android மற்றும் iOS இல் Meet ஆப்ஸின் புதுப்பிக்கப்பட்ட அமைப்புகளை பெற முடியும் என நிறுவனம் உறுதியளித்துள்ளது.