ரெப்போ வட்டி விகிதம் 6.50 அதிகரிப்பு! உயரும் வீடு வாகன கடன்;
இந்திய ரிசர்வ் வங்கி ஆனது ரெப்போ விகிதத்தை 35 அடிப்படை புள்ளிகள் என உயர்த்தியுள்ளது. இந்த ரெப்போ விகிதமானது ரிசர்வ் வங்கி வழங்கும் கடனுக்கான வட்டி விகிதமாகும். ஒட்டுமொத்தமாக கடனுக்கான விகிதம் தற்போது 6.50 சதவீதத்தை எட்டியுள்ளது. இந்த ரெப்போ விகித உயர்வால் வங்கிகளும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதத்தை அதிகரிக்கும் எனக்கூறப்படுகிறது. இதனால், வீடு, வாகனம், தனிநபர் கடன் போன்ற கடன்களுக்கான வட்டி விகிதம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நகர்வை முன்னெடுத்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதற்கு முன் மே மாதம் 4.40 சதவீதமாக இருந்த இந்த வட்டி விகிதம் இப்போது 6.50 சதவீதத்தை எட்டியுள்ளது.