NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / மிக்ஜாம் புயலால் தத்தளிக்கும் சென்னை; சிஎஸ்கேவின் வெளிநாட்டு வீரர் உருக்கமான பதிவு
    அடுத்த செய்திக் கட்டுரை
    மிக்ஜாம் புயலால் தத்தளிக்கும் சென்னை; சிஎஸ்கேவின் வெளிநாட்டு வீரர் உருக்கமான பதிவு
    சிஎஸ்கேவின் வெளிநாட்டு வீரர் உருக்கமான பதிவு

    மிக்ஜாம் புயலால் தத்தளிக்கும் சென்னை; சிஎஸ்கேவின் வெளிநாட்டு வீரர் உருக்கமான பதிவு

    எழுதியவர் Sekar Chinnappan
    Dec 04, 2023
    06:03 pm

    செய்தி முன்னோட்டம்

    சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) சுழற்பந்து வீச்சாளர் மகேஷ் தீக்ஷனா, மிக்ஜாம் புயலால் தண்ணீரில் மிதக்கும் சென்னைக்காக தனது கவலையை தெரிவித்துள்ளார்.

    மிக்ஜாம் புயலால் திங்கட்கிழமை (டிசம்பர் 4) பெய்த கனமழையால் சென்னை முழுவதும் பல பகுதிகளில் கடுமையாக தண்ணீர் தேங்கியுள்ளது.

    இந்திய வானிலை ஆய்வு மைய அறிக்கையின்படி, தற்போது வங்கக் கடலில் சென்னைக்கு வடகிழக்கில் சுமார் 90கிமீ தூரத்தில் உள்ள புயல், செவ்வாய்க்கிழமை மதியம் நெல்லூர் மற்றும் மச்சிலிப்பட்டினம் இடையே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கிடையே சென்னையில் வெள்ளம் சூழ்ந்துள்ள வீடியோக்கள் வைரலாக பரவி வரும் நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக மகேஷ் தீக்ஷனா எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

    Maheesh Theekshana feels for chennai

    பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரார்த்தனை செய்யும் மகேஷ் தீக்ஷனா

    மகேஷ் தீக்ஷனா தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "எனது இரண்டாவது இல்லமான சென்னையில் இருந்து சில காட்சிகளைப் பார்த்தேன்.

    பாதிக்கப்பட்ட அனைவருக்கும் எனது அன்பையும் பிரார்த்தனைகளையும் அனுப்புகிறேன். உறுதியுடன் இருங்கள். பாதுகாப்பாக இருங்கள். நாங்கள் உங்களுடன் ஒன்றாக இருக்கிறோம்." என்று தெரிவித்துள்ளார்.

    இதற்கிடையில், டிசம்பர் 19 ஆம் தேதி துபாயில் நடக்க உள்ள ஐபிஎல் 2024 மினி ஏலத்திற்கு முன்னதாக மகேஷ் தீக்ஷனாவை சென்னை சூப்பர் கிங்ஸ் தக்க வைத்துக் கொண்டது.

    நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் ஏலத்தில் ரூ.32.2 கோடி பர்ஸுடன் களமிறங்க உள்ளது.

    ட்விட்டர் அஞ்சல்

    மகேஷ் தீக்ஷனாவின் எக்ஸ் பதிவு

    😢 Just watched some concerning footage from my second home 🏡, Chennai. Sending all my love and prayers to everyone affected. Stay strong, stay safe. We're in this together. 🙏💛💛💛☁️🌪️ #yellove #StaySafeChennai #CycloneMichaung https://t.co/niA7m1H4tI

    — Maheesh Theekshana (@maheesht61) December 4, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை சூப்பர் கிங்ஸ்
    கனமழை
    சென்னை

    சமீபத்திய

    ராவல்பிண்டி வரை எதிரொலித்த இந்திய பாதுகாப்புப் படையினரின் வீரம்; பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு ராஜ்நாத் சிங்
    '2019 புல்வாமா தாக்குதலை பண்ணியது நாங்கள்தான்': பாகிஸ்தான் விமானப்படை அதிகாரி ஔரங்கசீப் அகமது ஒப்புதல் வாக்குமூலம் பாகிஸ்தான்
    மே 13க்குள் வீரர்கள் முகாமுக்கு திரும்ப வேண்டும்; ஐபிஎல்லை விரைவில் தொடங்கும் முயற்சியில் பிசிசிஐ தீவிரம் ஐபிஎல் 2025
    லக்னோவில் பிரம்மோஸ் ஏவுகணை தொழிற்சாலையை ராஜ்நாத் சிங் திறந்து வைத்தார்; ஆண்டுக்கு 100 ஏவுகணைகள் தயாரிக்கும் வசதி பாதுகாப்பு துறை

    சென்னை சூப்பர் கிங்ஸ்

    சிஎஸ்கே vs ஜிடி : டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் முதலில் பந்துவீச முடிவு! குஜராத் டைட்டன்ஸ்
    தோனி விளையாடுவாரா இல்லையா? இர்பான் பதான் சொல்வது இது தான்! எம்எஸ் தோனி
    ஐபிஎல்லில் எதிர்கால திட்டம் என்ன? மீண்டும் சஸ்பென்ஸ் வைத்த எம்எஸ் தோனி! ஐபிஎல்
    இது தான் சரியான பதிலடி! வெறுப்பேற்றிய ரசிகர்களை நக்கலடித்த ஜடேஜா! ரவீந்திர ஜடேஜா

    கனமழை

    தமிழகம் முழுவதும் தயார் நிலையிலுள்ள 540 பேர் கொண்ட 18 பேரிடர் மீட்பு குழு  தமிழ்நாடு
    9 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை  தமிழகம்
    தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: IMD  தமிழகம்
    காவிரி நீர் விவகாரம் - டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையிலிருந்து நீர் திறந்துவிடப்படும் என எதிர்பார்ப்பு  குடிநீர்

    சென்னை

    93,000 தெரு நாய்களுக்கு தடுப்பூசி போட சென்னை மாநகராட்சி திட்டம் இந்தியா
    பிரபுவின் மகளை கரம் பிடிக்கும் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குனர்
    சென்னை ஐஐடி மாணவர் தற்கொலை விவகாரம் - பேராசிரியர் பணியிடை நீக்கம்  ஐஐடி
    செம்பரப்பாக்கம் ஏரியிலிருந்து கூடுதல் தண்ணீர் திறப்பு - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை  பருவமழை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025