இந்தியாவுக்கு எதிரான தொடரின் வீரர்கள் பட்டியலை வெளியிட்டது தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம்
ஒருநாள் உலகக்கோப்பை தோல்விக்குப் பிறகு தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி முதல் இருதரப்பு தொடரில் இந்தியாவுக்கு எதிராக டிசம்பர் 10ஆம் தேதி முதல் விளையாட உள்ளது. இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் தலா 3 ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இரு அணிகளும் மோத உள்ள நிலையில், தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்திற்கான இந்திய கிரிக்கெட் அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. இந்நிலையில், திங்கட்கிழமை தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் இந்தியாவுக்கு எதிரான தொடரில் விளையாட உள்ள ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் அணிகளை அறிவித்துள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த ஒருநாள் உலகக்கோப்பையில், அரையிறுதி வரை முன்னேறினாலும் கேப்டன் டெம்பா பவுமா மோசமமாக செயல்பட்டதாக விமர்சிக்கப்பட்ட நிலையில், அவரை ஒருநாள் அணியில் இருந்து நீக்கியுள்ளது.
ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக ஐடென் மார்க்ரம் நியமனம்
டெம்பா பவுமா நீக்கப்பட்ட நிலையில், தென்னாப்பிரிக்காவின் டி20 கிரிக்கெட் அணியின் கேப்டன் ஐடென் மார்க்ரம் ஒருநாள் அணிக்கும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். டி20 அணியிலிருந்தும் நீக்கப்பட்டுள்ள டெம்பா பவுமா டெஸ்ட் அணியில் மட்டும் இடம் பிடித்துள்ளதோடு, அதன் கேப்டனாகவும் தொடர்ந்து செயல்பட உள்ளார் . முன்னணி வீரர்களில், ககிசோ ரபாடா டெஸ்ட் கிரிக்கெட்டில் கவனம் செலுத்துவதால் ஒருநாள் அணியில் இடம்பெறவில்லை. தென்னாப்பிரிக்க டி20 அணி : ஐடென் மார்க்ரம் (கேப்டன்), ஓட்னியல் பார்ட்மேன், மேத்யூ ப்ரீட்ஸ்கே, ஆண்ட்ரே பர்கர், ஜெரால்ட் கோட்ஸி (1வது மற்றும் 2வது T20I), டோனோவன் ஃபெரீரா, ரீசா ஹென்ட்ரிக்ஸ், மார்கோ ஜான்சன் (1வது மற்றும் 2வது T20Iக்கள்).
தென்னாப்பிரிக்காவின் ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் அணிகள்
தென்னாப்பிரிக்கா ஒருநாள் அணி: ஐடென் மார்க்ரம் (கேப்டன்), ஒட்னியல் பார்ட்மேன், நாந்த்ரே பர்கர், டோனி டி ஸோர்ஸி, ரீசா ஹென்ட்ரிக்ஸ், ஹென்ரிச் கிளாசென், கேசவ் மகராஜ், மிஹ்லாலி மபோங்வானா, டேவிட் மில்லர், வியான் முல்டர், அண்டில் பெஹ்லுக்வாயோ, டப்ரைஸ் ஷாம்வான்சி, டப்ரைஸ் ஷாம்வான்சி கைல் வெர்ரைன் மற்றும் லிசாட் வில்லியம்ஸ். தென்னாப்பிரிக்கா டெஸ்ட் அணி: டெம்பா பவுமா (கேப்டன்), டேவிட் பெடிங்ஹாம், நாண்ட்ரே பர்கர், ஜெரால்ட் கோட்ஸி, டோனி டி ஜோர்ஜி, டீன் எல்கர், மார்கோ ஜான்சன், கேசவ் மகராஜ், ஐடன் மார்க்ராம், வியான் முல்டர், லுங்கி என்கிடி, கீகன் பீட்டர்சன், காகிசோ செயின்ட் ரபாடா, மற்றும் கைல் வெர்ரின்.