
இது தான் சரியான பதிலடி! வெறுப்பேற்றிய ரசிகர்களை நக்கலடித்த ஜடேஜா!
செய்தி முன்னோட்டம்
சென்னை சூப்பர் கிங்ஸ் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா ஐபிஎல் 2023 இன் முதல் தகுதிச் சுற்றில் நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணியை 15 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதன் மூலம் ஆட்டநாயகன் விருதை வென்றார்.
ஜடேஜா குவாலிஃபையர் 1ல் தனது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 16 பந்துகளில் 22 ரன்கள் எடுத்தார் மற்றும் தான் பந்துவீசிய நான்கு ஓவர்களில் 18 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை எடுத்தார்.
அவரது ஆல்ரவுண்ட் செயல்திறன் சென்னை சூப்பர் கிங்ஸை 15 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸை தோற்கடித்து ஐபிஎல் 2023 இன் இறுதிப் போட்டியில் இடம்பிடிக்க உதவியது.
இந்நிலையில் ட்விட்டரில், "ரசிகர்கள் சிலருக்கு தெரியாவிட்டாலும், அப்ஸ்டாக்சிற்கு தெரிந்துள்ளது." என நகைச்சுவையாக பதிவிட்டுள்ளார்.
why conflict between jadeja and fans
ரசிகர்களால் மனவருத்தத்தில் ரவீந்திர ஜடேஜா
முன்னதாக ஜடேஜா நடப்பு ஐபிஎல்லில் 7வது இடத்தில் பேட்டிங் செய்ய வருவதைப் பார்க்கும்போது ரசிகர்கள் எம்எஸ் தோனியை பார்க்க விரும்புவதால் ஏமாற்றமடைகிறார்கள்.
இதனால் ரவீந்திர ஜடேஜாவை அவுட்டாகி வெளியே சென்று தோனியை அனுப்புமாறு தொடர்ந்து கூச்சல் போடுகின்றனர்.
குறிப்பாக மே 10 அன்று சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து பேசியபோது ஜடேஜா இதை வெளிப்படையாகவே பேசினார்.
அப்போது அவர் சிரித்துக் கொண்டே அதை சொன்னாலும், இதனால் தனக்கு வருத்தம் தான் என்பதை குறிப்பிட்டார்.
இந்நிலையில், அதன் தொடர்ச்சியாகவே தன்னை வெறுப்பேற்றும் ரசிகர்களை கிண்டலடிக்கும் வகையில் இதை பதிவிட்டுள்ளதாகவே தெரிகிறது.