
ஐபிஎல்லில் எதிர்கால திட்டம் என்ன? மீண்டும் சஸ்பென்ஸ் வைத்த எம்எஸ் தோனி!
செய்தி முன்னோட்டம்
சென்னை சேப்பாக்கத்தில் நடந்த குவாலிஃபையர் 1 போட்டிக்கு பிறகு ஐபிஎல்லில் தனது எதிர்காலம் குறித்த ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அவரே விளக்கம் அளித்துள்ளார்.
முன்னதாக செவ்வாயன்று (மே 23) நடந்த போட்டியில் குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தியதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
இந்நிலையில், போட்டிக்கு பிறகு நடந்த நிகழ்ச்சியில் ஐபிஎல் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே, தோனியின் எதிர்கால திட்டம் குறித்து கேள்வி எழுப்பினார்.
அவருக்கு மட்டுமல்லாது கிரிக்கெட் ரசிகர்கள் அனைவருக்குமே இந்த கேள்வி உள்ளதால், மைதானத்தில் இருந்த ரசிகர்கள் அனைவருமே தோனியின் பதிலை எதிர்பார்த்தனர்.
dhoni speaks about future plan
எதிர்கால திட்டம் குறித்து எம்எஸ் தோனி விளக்கம்
ஹர்ஷா போக்லேவின் கேள்விக்கு பதிலளித்த எம்எஸ் தோனி, "எதிர்கால திட்டம் குறித்து தற்போதைக்கு எந்த முடிவும் எடுக்கவில்லை.
இந்த சீசன் முடிந்த பிறகு, அது குறித்து முடிவு செய்ய எனக்கு 8-9 மாதங்கள் உள்ளன. டிசம்பரில் மினி ஏலம் இருக்கும்.
அப்போது இது குறித்து பார்த்துக் கொள்ளலாம். இப்போதே ஏன் தலையை போட்டு உருட்ட வேண்டும். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மைதானம் அல்லது வெளியில் எப்போதும் நான் ஒன்றாக இருப்பேன்." என்றார்.
மேலும் பேசிய தோனி, ஐபிஎல்லில் முன்பை போல் இல்லாமல் தற்போது 10 அணிகள் இருப்பது போட்டியை இன்னும் கடினமாக்குகிறது என்று தெரிவித்ததோடு, தங்கள் வீரர்கள் கடினமாக உழைத்தார்கள் என்றும் தெரிவித்தார்.