NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / காவிரி நீர் விவகாரம் - டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையிலிருந்து நீர் திறந்துவிடப்படும் என எதிர்பார்ப்பு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    காவிரி நீர் விவகாரம் - டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையிலிருந்து நீர் திறந்துவிடப்படும் என எதிர்பார்ப்பு 
    காவிரி நீர் விவகாரம் - டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையிலிருந்து நீர் திறந்துவிடப்படும் என எதிர்பார்ப்பு

    காவிரி நீர் விவகாரம் - டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையிலிருந்து நீர் திறந்துவிடப்படும் என எதிர்பார்ப்பு 

    எழுதியவர் Nivetha P
    Nov 16, 2023
    07:31 pm

    செய்தி முன்னோட்டம்

    கர்நாடகா மாநிலம் குடகு பகுதியில் உருவாகும் காவிரி, தமிழகத்தில் பல பிரிவுகளாக பிரிந்து இறுதியில் கடலில் சென்று கலக்கிறது.

    இந்த காவிரியில் தமிழகத்திற்கும் உரிமை உள்ள நிலையில், அதனை மறுத்து தொடர்ந்து பிரச்சனை செய்து வருகிறது கர்நாடகா.

    50 ஆண்டுகளுக்கு மேலாக இந்த பிரச்சனை நிலவி வருகிறது.

    இதற்காக காவிரி மேலாண்மை ஆணையம், ஒழுங்காற்று குழு உள்ளிட்டவை உருவாக்கப்பட்டும் பயனில்லை.

    பாசனம் 

    உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் தண்ணீரை திறந்து விடாத கர்நாடக அரசு 

    உச்ச நீதிமன்றம் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடும்படி உத்தரவிட்டும் இந்தாண்டு குறைந்த அளவிலான தண்ணீரை மட்டுமே கர்நாடகா அரசு திறந்துவிட்டது.

    இதனால் குறுவை சாகுபடி முற்றிலும் பாதிப்படைந்தது. காவிரி நீர் வராததால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரசரவென குறைந்தது.

    நவம்பர் 1ம் தேதி முதல் 23ம் தேதி வரை தமிழகத்திற்கு வினாடிக்கு 2600 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருக்க வேண்டும்.

    ஆனால் திறக்கப்படவில்லை.

    உத்தரவு 

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை 

    இந்நிலையில் கடந்த 2 வாரங்களாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

    இதன் காரணமாக மேட்டூர் அணைக்கான நீர்வரத்தும் கணிசமாக உயர்ந்தது.

    தற்போது சற்று மழை குறைந்துள்ளதால் அணைக்கான நீர்வரத்தும் குறைந்துள்ளது.

    மழை காரணமாக கர்நாடகாவின் கிருஷ்ணா சாகர் அணையிலிருந்து வினாடிக்கு 1,542 கனஅடி நீர் திறந்துவிடப்படுகிறது.

    அதேபோல் வினாடிக்கு 800 கனஅடி நீர் கபினி அணையில் இருந்து திறந்துவிடப்படுகிறது.

    காவிரி 

    மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்வு 

    இதன் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்றைய நிலவரப்படி 60.41 அடியாக இருந்த நிலையில், இன்று(நவ.,16) 60.74 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 25.24 டி.எம்.சி.ஆக உள்ளது.

    குடிநீர் தேவைக்காக மட்டும் வினாடிக்கு 250 கனஅடி நீர் திறந்துவிடப்படுகிறது.

    அண்மையில் பெய்த கனமழை காரணமாக இன்னும் சில தினங்களுக்கு சம்பா சாகுபடிக்கு, அணையிலிருந்து நீர் தேவையில்லை என்னும் சூழல் நிலவுகிறது.

    எதிர்பார்ப்பு 

    டெல்டா சம்பா பாசனத்திற்கு நீர் திறந்துவிடப்படலாம் என எதிர்பார்ப்பு 

    அதனால் தமிழ்நாடு மாநிலத்தின் மேட்டூர் அணையில் நீரினை மேலும் தேக்கி வைத்து, நீர்மட்டம் உயர்ந்த பின்னர் டெல்டா சம்பா பாசனத்திற்கு திறந்துவிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    மழையின் அளவு, காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அண்மையில் குறைந்துள்ள நிலையில், அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 3,320 கன அடியிலிருந்து தற்போது 3,239 கன அடியாக குறைந்துள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    குடிநீர்
    தமிழ்நாடு
    கர்நாடகா
    காவிரி

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    குடிநீர்

    நீதிமன்ற அவமதிப்பு வழக்கு - தமிழக தலைமை செயலர் நேரில் ஆஜராக உத்தரவு  தேனி
    தமிழகத்திற்கு 5,000 கன அடி நீர் திறப்பு - காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு தமிழ்நாடு
    சர்வ அமாவாசை - ராமேஸ்வரத்தில் புனித நீராடி, தர்ப்பணம் செய்து பக்தர்கள் வழிபாடு   ராமேஸ்வரம்
    தருமபுரி அரசு பள்ளி குடிநீர் தொட்டியில் மனித கழிவுகள் கலந்துள்ளதாக புகார் தமிழ்நாடு

    தமிழ்நாடு

    19 தமிழக மாவட்டங்களில் இன்று கொட்டி தீர்க்க போகும் கனமழை  புதுச்சேரி
    கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் - தமிழக அரசு அதிரடி உத்தரவு தீபாவளி
    தீபாவளி 2023- தீபாவளியின் முக்கியத்துவம், வரலாறு மற்றும் கொண்டாடப்படும் முறை தீபாவளி
    தமிழகத்தில் 64.22 லட்சம் பேர் அரசு பணிக்காக பதிவு செய்து காத்திருப்பதாக தகவல்  பள்ளி மாணவர்கள்

    கர்நாடகா

    கர்நாடகாவின் மிகப்பெரிய மாவட்டம் பெலகாவியை பிரிப்பது குறித்து ஆலோசனை மாநில அரசு
    'மதம் மாறு அல்லது பணம் கொடு'; பெங்களூரை அதிர வைத்த பாலியல் தொழில் பெங்களூர்
    தமிழகத்திற்கு காவிரி நீர் திறந்துவிட எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக விவசாயிகள் விடிய விடிய போராட்டம் விவசாயிகள்
    கர்நாடகா: முஸ்லீம் மாணவர்களை பாகிஸ்தானுக்கு போக சொன்ன ஆசிரியை இடமாற்றம் டெல்லி

    காவிரி

    காவிரி மேலாண்மை உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது: உச்சநீதிமன்றம் உச்ச நீதிமன்றம்
     'எங்கள் காவிரி எங்கள் உரிமை' - குரல் கொடுக்கும் கன்னட நடிகர்கள்  ட்விட்டர்
    பெங்களூர் முழு அடைப்பு- பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு இல்லை தமிழ்நாடு
    காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு - கர்நாடக அரசு தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025