LOADING...
பஹல்காம் தீவிரவாதிகள் தாக்குதலுக்காக பைசரன் பள்ளத்தாக்கினை தேர்வு செய்ததன் காரணத்தை வெளியிட்ட NIA
ஏப்ரல் 22 அன்று பயங்கரவாதிகள், 25 சுற்றுலாப் பயணிகளையும் ஒரு உள்ளூர்வாசியையும் சுட்டுக் கொன்றனர்

பஹல்காம் தீவிரவாதிகள் தாக்குதலுக்காக பைசரன் பள்ளத்தாக்கினை தேர்வு செய்ததன் காரணத்தை வெளியிட்ட NIA

எழுதியவர் Venkatalakshmi V
Aug 29, 2025
09:46 am

செய்தி முன்னோட்டம்

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் சில மாதங்களுக்கு முன், 26 பொதுமக்கள் கொல்லப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலை விசாரித்து வரும் தேசிய புலனாய்வு அமைப்பு (NIA), மூன்று பயங்கரவாதிகள் இந்தக் கொலைகளைச் செய்ததில் நேரடியாக ஈடுபட்டிருப்பதை உறுதிப்படுத்தியுள்ளது. மேலும், பைசரன் பள்ளத்தாக்கு ஒப்பீட்டளவில் வெறிச்சோடி இருக்குமென்பதால், தாக்குதலுக்கு அதைத் தேர்ந்தெடுத்ததாக வட்டாரங்கள் இந்தியா டுடேயிடம் தெரிவித்தன. ஏப்ரல் 22 அன்று, பாகிஸ்தான் பயங்கரவாதக் குழுவான லஷ்கர்-இ-தொய்பாவின் (LeT) ஒரு பிரிவான தி ரெசிஸ்டன்ஸ் ஃபோர்ஸ் (TRF) இன் மூன்று பயங்கரவாதிகள், பஹல்காமில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கில் நுழைந்து 25 சுற்றுலாப் பயணிகளையும் ஒரு உள்ளூர்வாசியையும் சுட்டுக் கொன்றனர்.

பைசாரன் பள்ளத்தாக்கு

தாக்குதல் நடத்த தேர்வு செய்த இடம்

காஷ்மீர் பள்ளத்தாக்கில் பஹல்காம் ஓரளவு வெறிச்சோடி இருக்கும் எனவும், அதோடு சுற்றுலாப் பயணிகள் அதிகமாகவும் இருந்ததால், தாக்குதல் நடத்தியவர்கள் அங்கு தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. முக்கிய பாதுகாப்பு நிறுவல்களிலிருந்து வெகு தொலைவில் இந்த இடம் இருப்பதாலும், படைகளின் பதில் நடவடிக்கை தாமதமாகும் என்பதால் பயங்கரவாதிகளுக்கு ஒரு சாதகமாக அமைந்தது, இதை அவர்கள் தாக்குதலின் போது பயன்படுத்திக் கொண்டனர். தடயங்களுக்காக பயங்கரவாதிகளிடமிருந்து மீட்கப்பட்ட டிஜிட்டல் சாதனங்களை NIA தற்போது ஆய்வு செய்து வருகிறது. தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களுடன், சம்பவ இடத்திலிருந்து சேகரிக்கப்பட்ட வெற்று தோட்டாக்களையும் புலனாய்வாளர்கள் ஒப்பிட்டுப் பார்த்துள்ளனர். இது அடையாளம் காணப்பட்ட தாக்குதல் நடத்தியவர்களின் பங்கை மேலும் உறுதிப்படுத்துகிறது.

ஆபரேஷன் மஹாதேவ்

காஷ்மீரில் நடந்த ஆபரேஷன் மஹாதேவில் பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை 

கடந்த மாதம், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, லஷ்கர் உயர்மட்ட தளபதி சுலைமான் ஷா, ஆப்கானிஸ்தான் மற்றும் ஜிப்ரான் ஆகிய மூன்று பயங்கரவாதிகளும் பாதுகாப்புப் படையினரால் ஆபரேஷன் மகாதேவில் கொல்லப்பட்டதை உறுதிப்படுத்தினார். ஏப்ரல் 22 படுகொலைக்குப் பிறகு, அவர்களுக்கு தங்குமிடம் வழங்கியவர்களால் அவர்கள் பஹல்காம் தாக்குதல் நடத்தியவர்கள் என்று அடையாளம் காணப்பட்டனர். விசாரணையில், பயங்கரவாதிகள் பர்வைஸ் அகமது ஜோதர் மற்றும் பஷீர் அகமது ஜோதர் என அடையாளம் காணப்பட்ட இரண்டு உள்ளூர் ஆண்களின் உதவியுடன் தங்குமிடம் ஏற்பாடு செய்திருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. அவர்களுக்கு ஆதரவளித்ததற்காக ரூ.3,000 வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. பின்னர் இரண்டு நபர்களும் கைது செய்யப்பட்டு, அவர்களின் ஈடுபாடு மற்றும் பிற நெட்வொர்க்குகளுடனான சாத்தியமான தொடர்புகள் குறித்து விசாரிக்கப்படுகிறார்கள்.