Page Loader
அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370 ரத்தால் காஷ்மீருக்கு வளர்ச்சி; காங்கிரசின் சல்மான் குர்ஷித் கருத்து
370 ரத்தால் காஷ்மீர் வளர்ந்துள்ளதாக காங்கிரசின் சல்மான் குர்ஷித் பாராட்டு

அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370 ரத்தால் காஷ்மீருக்கு வளர்ச்சி; காங்கிரசின் சல்மான் குர்ஷித் கருத்து

எழுதியவர் Sekar Chinnappan
May 30, 2025
12:54 pm

செய்தி முன்னோட்டம்

இந்திய நாடாளுமன்றக் குழுவின் அனைத்துக் கட்சி உறுப்பினராக இந்தோனேசியாவிற்கு அதிகாரப்பூர்வ பயணம் செய்துள்ள மூத்த காங்கிரஸ் தலைவர் சல்மான் குர்ஷித், அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதன் மூலம் ஜம்மு காஷ்மீரில் நீண்டகாலமாக நிலவி வந்த பிரிவினைவாத பதட்டங்கள் தீர்ந்து, பிராந்தியத்தில் செழிப்பு ஏற்பட்டதாகக் குறிப்பிட்டார். இந்தோனேசிய சிந்தனையாளர்கள் மற்றும் கல்வியாளர்களிடம் உரையாற்றிய சல்மான் குர்ஷித், அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 370 தனிமையின் தோற்றத்தை உருவாக்கியதாகவும், 2019 இல் அது நீக்கப்பட்டதன் மூலம் அது சரிசெய்யப்பட்டதாகவும் கூறினார். முன்னதாக, ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370வது பிரிவு, ஆகஸ்ட் 2019 இல் பாஜக தலைமையிலான அரசாங்கத்தால் ரத்து செய்யப்பட்டது.

மாற்றங்கள்

மாற்றங்களை சுட்டிக்காட்டிய சல்மான் குர்ஷித்

பிராந்தியத்தில் 65% வாக்குப்பதிவு மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை நிறுவுதல் போன்ற அடுத்தடுத்த முன்னேற்றங்களை நேர்மறையான மாற்றத்தின் குறிகாட்டிகளாக குர்ஷித் சுட்டிக்காட்டினார். குர்ஷித்தின் கருத்துக்கள் அவரது முந்தைய நிலைப்பாட்டிலிருந்து ஒரு மாற்றத்தைக் குறிக்கின்றன. குறிப்பாக, 2019 ஆம் ஆண்டில், ஜம்மு காஷ்மீருக்கும் இந்தியாவுக்கும் இடையிலான ஒரு அடையாளப் பிணைப்பு என்று அவர் பிரிவு 370 ஐ விவரித்தார். அதன் ரத்துக்கான அவரது தற்போதைய ஒப்புதல் காங்கிரஸின் மாறி வரும் வரும் நிலைப்பாட்டை பிரதிபலிக்கிறது. ஆரம்பத்தில், கட்சி 370 ரத்து நடவடிக்கையை எதிர்த்தது மற்றும், ரத்துக்கு எதிரான ஜம்மு காஷ்மீர் கூட்டமைப்பின் குப்கர் பிரகடனத்தில் பிராந்திய கட்சிகளுடன் இணைந்து செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.