
சென்னையிலுள்ள பிரபல நகைக்கடையில் மத்திய வருவாய் புலனாய்வுத்துறை சோதனை
செய்தி முன்னோட்டம்
சென்னை பாரிமுனையில் உள்ள என்.எஸ்.சி. போஸ் ரோடு பகுதியில் அமைந்துள்ளது ஓர் பிரபல நகை கடை.
இந்த கடையில் நேற்று(அக்.,17) திடீரென மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர் என்று கூறப்படுகிறது.
இந்த சோதனையானது நேற்று மதியம் 1 மணிக்கு துவங்கி இரவு 9 மணி வரை நடந்துள்ளது.
இதில் ரூ.1.50 கோடி பணத்தினை பறிமுதல் செய்துள்ளதாகவும், அது ஹவாலா பணமா? என்று விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
இதனிடையே, கடந்த ஒருவார காலகட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் மேற்கொண்ட சோதனைகளில் இதுவரை ரூ.15 கோடி மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது எனவும் தகவல்கள் தெரிவிக்கிறதுஎம்பெட் .
ட்விட்டர் அஞ்சல்
அதிரடி சோதனை
பிரபல நகைக்கடையில் மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிரடி சோதனை | Gold Raid#GoldRaid #Chennai #ThanthiTv https://t.co/YQ3v8QdhUo
— Thanthi TV (@ThanthiTV) October 17, 2023