
நேரு முதல் மோடி வரை; பாகிஸ்தானுடனான இந்தியாவின் நிலைப்பாட்டை ரஷ்யாவில் முழங்கிய கனிமொழி எம்பி
செய்தி முன்னோட்டம்
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவிற்கு இந்தியா சார்பில் சென்றுள்ள அனைத்துக் கட்சிக்குழு குழுவிற்கு தலைமை தாங்கும் திமுக எம்பி கனிமொழி, பயங்கரவாதத்தை வளர்ப்பதில் பாகிஸ்தானின் பங்கை கடுமையாகக் கண்டித்து, தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு மத்தியில் அமைதிப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்கு எதிரான இந்தியாவின் உறுதியான நிலைப்பாட்டை வலியுறுத்தினார்.
ஏப்ரல் 22 பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் எல்லையைத் தாண்டிய பயங்கரவாத மையங்களை குறிவைத்து இந்தியா மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் குறித்து தலைவர்களுக்கு விளக்கமளிக்க தூதுக்குழு ரஷ்யா சென்றது.
தங்கள் வருகையை முடித்து வைத்து ஒரு செய்தியாளர் சந்திப்பில், கனிமொழி பாகிஸ்தானின் அணு ஆயுத அச்சுறுத்தல்களை இனியும் சகித்துக் கொள்ள முடியாது என்று கூறி, எந்தவொரு ராணுவ நடவடிக்கையையும் இந்தியா உறுதியாக எதிர்கொள்ளும் என்பதை மீண்டும் உறுதிப்படுத்தினார்.
அமைதி
அமைதியா விரும்பும் இந்தியா
"நாங்கள் பயங்கரவாத மையங்களை மட்டுமே குறிவைத்துள்ளோம். பாகிஸ்தான் பயங்கரவாதிகளைப் பாதுகாக்கவும், தவறான பிரச்சாரத்தை பரப்பும் வேலையிலும் ஈடுபடுகிறது." என்று அவர் கூறினார்.
இந்தியா அமைதிக்கு எப்போதும் திறந்தே உள்ளது, ஆனால் அதற்காக பாதுகாப்பை விலையாகக் கொடுக்கமுடியாது என்பதை வலியுறுத்தினார்.
துணை வெளியுறவு அமைச்சர் ஆண்ட்ரி ருடென்கோ மற்றும் ரஷ்ய நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட உயர்மட்ட ரஷ்ய அதிகாரிகளுடனான சந்திப்புகளின் போது, பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதில் ரஷ்ய ஆதரவு தொடர்ந்து வழங்கப்படும் என்ற உறுதிமொழியை தூதுக்குழு பெற்றது.
ஆதரவு
நிபந்தனையற்ற ஆதரவு
பயங்கரவாதத்தின் அனைத்து வடிவங்களுக்கும் எதிராக இந்தியாவுடன் சமரசம் செய்யாத கூட்டுப் போராட்டத்திற்கு துணை ரஷ்யா தனது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியது.
ஐநா, பிரிக்ஸ் மற்றும் எஸ்சிஓ போன்ற மன்றங்களில் இதற்கான ஒத்துழைப்பை மேம்படுத்தத் தயாராக இருப்பதாகக் கூறியது.
பாகிஸ்தான் மக்களுக்கும் அதன் அரசுக்கும் இடையிலான வேறுபாட்டைக் குறிப்பிட்டு, கனிமொழி இந்தியாவின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார்.
"நேரு முதல் மோடி வரை, ஒவ்வொரு தலைவரும் அமைதியைக் கட்டியெழுப்ப முயற்சித்துள்ளனர், ஆனால் பயங்கரவாதத் தாக்குதல்கள் நமது வகுப்புவாத நல்லிணக்கத்தை தொடர்ந்து அச்சுறுத்துகின்றன." என்று அவர் கூறினார்.
பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதத்தை எதிர்ப்பதற்கான உலகளாவிய இராஜதந்திர நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தப் பயணம் உள்ளது.
தற்போது ஐந்து நாடுகள் சுற்றுப்பயணத்தில் தூதுக்குழு அடுத்த இடத்திற்குச் செல்கிறது.