சென்னை விமான நிலையத்தில் ரூ.1.5 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்
செய்தி முன்னோட்டம்
சென்னை விமானநிலையத்தில் 2.4 கிலோ எடைக்கொண்ட கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம் பெங்களூரில் இருந்து சென்னை பன்னாட்டு விமானநிலையத்திற்கு தங்கம் கடத்தி வரப்படுவதாக சென்னை மண்டல மத்திய வருவாய் புலனாய்வு பிரிவின் அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
அதன் அடிப்படையில், புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் உடனே விமான நிலையம் விரைந்து சென்று பெங்களூர் விமானத்தில் வந்து இறங்கிய அனைத்து பயணிகளையும் தீவிரமாக கண்காணித்துள்ளனர்.
இந்நிலையில் இவர்களுக்கு 2 பெண்கள் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
அதனால் அவர்களை சோதனை செய்துள்ளனர்.
அப்போது அவர்களிடம் ரூ.1.5 கோடி மதிப்புள்ள தங்கம் இருப்பது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் அவர்களை கைது செய்த அதிகாரிகள், தங்களின் விசாரணையினை தீவிரப்படுத்தியுள்ளனர்.
ட்விட்டர் அஞ்சல்
கடத்தல் தங்கம் பறிமுதல்
பெங்களூரில் இருந்து கடத்திவரப்பட்ட ரூ.1.5 கோடி மதிப்புள்ள 2.4 கிலோ தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. கடத்தலில் ஈடுபட்ட சென்னையைச் சேர்ந்த 2 பெண் பயணிகளை கைது செய்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். #ChennaiAirport #Bangalore #GoldSmuggling pic.twitter.com/PQVGB5O4Qy
— Idam valam (@Idam_valam) November 22, 2023