வணிகம் செய்தி
பாமர மக்களுக்கும் புரியும்படியான, கலப்படமற்ற வணிகச் செய்திகளை இங்கே படிக்கவும்.
டிரம்பின் 50% வரிகள் 3 லட்சம் இந்தியர்களின் வேலைகளை பாதிக்கக்கூடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கை
இந்திய இறக்குமதிகள் மீதான அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் வரிகளை உயர்த்தியதால் இந்தியாவில் கிட்டத்தட்ட 300,000 வேலைகள் பாதிக்கப்படும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
மறுசீரைக்கப்படும் GST வரிகள்: நுகர்வோர்களுக்கு எவ்வாறு பலன் தரும் என ஒரு பார்வை
இந்திய அரசாங்கம், சரக்கு மற்றும் சேவை வரி (GST) முறையை ஒரு பெரிய அளவில் மறுசீரமைக்க திட்டமிட்டுள்ளது.
ஒடிசாவில் பல மாவட்டங்களில் பூமிக்கடியில் தங்கம் இருப்பு கண்டுபிடிப்பு; உறுதி செய்தது இந்திய புவியியல் ஆய்வு மையம்
பல மாவட்டங்களில் தங்க இருப்பு இருப்பதை இந்திய புவியியல் ஆய்வு மையம் (GSI) உறுதிப்படுத்திய பின்னர் ஒடிசா ஒரு சாத்தியமான தங்க சுரங்க மையமாக வளர்ந்து வருகிறது.
GST வரி குறைப்பால் மலிவாகும் கார், பைக் விலைகள்
பயணிகள் வாகனங்கள் (PVs) மற்றும் இரு சக்கர வாகனங்கள் மீதான சரக்கு மற்றும் சேவை வரியில் (GST) பெரிய குறைப்பை இந்திய அரசு பரிசீலித்து வருகிறது.
தங்கம் விலையில் மாற்றமில்லை; இன்றைய (ஆகஸ்ட் 18) நிலவரம்
கடந்த சில வாரங்களாகவே ஏற்ற இறக்கத்துடன் நீடிக்கும் தங்க விலை திங்கட்கிழமை (ஆகஸ்ட் 18) எந்த மாற்றமும் இல்லாமல் பழைய விலையிலேயே நீடிக்கிறது.
ஆறாவது சுற்று வர்த்தக பேச்சுவார்த்தைக்காக இந்தியா வரவிருந்த அமெரிக்க குழுவின் பயணம் ரத்து எனத் தகவல்
ஆகஸ்ட் 25-29 தேதிகளில் திட்டமிடப்பட்டிருந்த இருதரப்பு வர்த்தக ஒப்பந்த (BTA) பேச்சுவார்த்தைகளின் ஆறாவது சுற்றுக்காக இந்தியாவுக்கான தனது பயணத்தை அமெரிக்கா ஒத்திவைக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்து சாப்பிடுபவர்களுக்கு ஷாக் கொடுத்த ஸ்விக்கி; பிளாட்ஃபார்ம் கட்டணம் ரூ.14 ஆக உயர்வு
உணவு விநியோக நிறுவனமான ஸ்விக்கி மீண்டும் உணவு ஆர்டர்களுக்கான பிளாட்ஃபார்ம் கட்டணத்தை ரூ.2 முதல் ரூ.14 வரை உயர்த்தியுள்ளது. பண்டிகை காலம் நெருங்கும் நிலையில் செயல்படுத்தப்பட்டுள்ள இந்த உயர்வு, அதிக வாடிக்கையாளர் பரிவர்த்தனைகளைப் பயன்படுத்திக் கொள்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று தொழில்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
₹40 குறைவு; இன்றைய (ஆகஸ்ட் 16) தங்கம் வெள்ளி விலை நிலவரம்
கடந்த சில வாரங்களாகவே ஏற்ற இறக்கத்துடன் நீடிக்கும் தங்க விலை சனிக்கிழமை (ஆகஸ்ட் 16) மீண்டும் சரிவைச் சந்தித்துள்ளது.
எரிசக்தியில் தன்னிறைவு அடைய உதவும் தேசிய ஆழ்கடல் ஆய்வுப் பணி; பிரதமர் மோடி அறிவிப்பின் பின்னணி
செங்கோட்டையில் இருந்து தனது சுதந்திர தின உரையில், கடலுக்கு அடியில் எண்ணெய் மற்றும் எரிவாயு இருப்புக்களை அடையாளம் காண தேசிய ஆழ்கடல் ஆய்வுப் பணியைத் தொடங்குவதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.
No cost EMI நன்மையா தீமையா? பொருள் வாங்கும் முன் இதை கட்டாயம் தெரிந்துகொள்ளுங்கள்
கிரெடிட் கார்டுகளில் No cost EMI எனப்படும் விலை இல்லாத மாதாந்திர தவணை முறை இந்தியாவில் பிரபலமான கட்டண விருப்பமாக உருவெடுத்துள்ளது.
இனி ஜிஎஸ்டியில் இரண்டு அடுக்குகள்தான்? புதிய திட்டத்தை முன்மொழிந்தது மத்திய நிதியமைச்சகம்
அடுத்த தலைமுறை சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) சீர்திருத்தங்களுக்கான பிரதமர் நரேந்திர மோடியின் சுதந்திர தின அழைப்பைத் தொடர்ந்து, நிதி அமைச்சகம் தேர்ந்தெடுக்கப்பட்ட பொருட்களுக்கு சிறப்பு விகிதங்களுடன் எளிமைப்படுத்தப்பட்ட இரண்டு அடுக்கு ஜிஎஸ்டி கட்டமைப்பை முன்மொழிந்துள்ளது.
அமெரிக்காவை இந்தியா நம்பக் கூடாது; அமெரிக்க பொருளாதார வல்லுநர் ஜெஃப்ரி சாக்ஸ் எச்சரிக்கை
அமெரிக்காவின் பிரபல பொருளாதார நிபுணர் ஜெஃப்ரி சாக்ஸ், அமெரிக்கா மீது அதிக நம்பிக்கை வைக்க வேண்டாம் என இந்தியாவை எச்சரித்துள்ளார்.
அக்டோபர் 4 முதல் காசோலையை செலுத்திவிட்டு காத்திருக்க வேண்டியதில்லை; ஆர்பிஐ புதிய முறையை அறிமுகம் செய்கிறது
இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) அக்டோபர் 4 முதல் வேகமான காசோலை தீர்வு செயல்முறையை அறிமுகப்படுத்துகிறது.
மொத்த விலைக் குறியீடு உள்ளிட்ட பொருளாதார குறிகாட்டிகளில் மாற்றம் செய்ய மத்திய அரசு முடிவு
மொத்த விலைக் குறியீட்டை (WPI) 2022-23 அடிப்படை ஆண்டாகத் திருத்துதல், முதல் முறையாக உற்பத்தியாளர் விலைக் குறியீட்டை (PPI) அறிமுகப்படுத்துதல் மற்றும் தொழில்துறை உற்பத்தி குறியீட்டை (IIP) புதுப்பித்தல் உள்ளிட்ட முக்கிய பொருளாதார குறிகாட்டிகளை மாற்றியமைக்க மத்திய அரசு நாடு தழுவிய கணக்கெடுப்பைத் தொடங்கியுள்ளது.
₹50,000 மினிமம் பாலன்ஸ் நிபந்தனையை திரும்ப பெற்ற ICICI: புதிய குறைந்தபட்ச இருப்புத் தொகை என்ன?
புதிய சேமிப்புக் கணக்குகளுக்கான மினிமம் பாலன்ஸ் தொகை ₹50,000 ஆக இருக்க வேண்டும் என்ற நிபந்தனையை ஐசிஐசிஐ வங்கி திரும்பப் பெற்றுள்ளது.
அக்டோபர் முதல், UPI பயனர்கள் ஒருவருக்கொருவர் பணம் கோர முடியாது
இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI), அக்டோபர் 1, 2025 ஆம் ஆண்டுக்குள் ஒருங்கிணைந்த கொடுப்பனவு இடைமுகத்தில் (UPI) உள்ள peer-to-peer (P2P) "collect requests" அம்சத்தை முடக்குவதாக அறிவித்துள்ளது.
133 ஆண்டுகளுக்குப் பிறகு, ஓய்வு பெறவிருக்கும் பிரபல கேமரா நிறுவனம்?
பிரபல கேமரா நிறுவனமான கோடக், ஒரு வருடத்திற்குள் வணிகத்தை நிறுத்தக்கூடும் என்று முதலீட்டாளர்களை எச்சரித்துள்ளது.
ஏர் இந்தியா தனது விமானங்களை மறுசீரமைப்பதில் தீவிரமாக இல்லையா?
ஏர் இந்தியா தனது விமான மறுசீரமைப்பு திட்டத்திற்கான காலக்கெடுவை தள்ளி வைத்துள்ளது.
இந்தியாவின் சில்லறை பணவீக்கம் 8 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 1.55% ஆகக் குறைந்துள்ளது
இந்தியாவின் சில்லறை பணவீக்கம் ஜூலை மாதத்தில் எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 1.55% ஆகக் குறைந்துள்ளதாக செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க வரிகளால் பாதிக்கப்பட்ட வைரத் தொழிலாளர்கள்; சவுராஷ்டிராவில் 1 லட்சம் வேலை பறிபோனது
அமெரிக்காவின் கடுமையான வரி உயர்வின் தாக்கத்தால் இந்திய வைர வெட்டு மற்றும் மெருகூட்டல் தொழில் தத்தளித்து வருகிறது.
அமெரிக்கா-சீனா இடையேயான வரி இடைநிறுத்தத்தை டிரம்ப் 90 நாட்கள் நீட்டித்தார்
உலகின் இரண்டு பெரிய பொருளாதார நாடுகளான அமெரிக்காவும், சீனாவும் நவம்பர் 10 ஆம் தேதி வரை தங்கள் வர்த்தகப் போர் நிறுத்தத்தை நீட்டிக்க ஒப்புக் கொண்டுள்ளன.
நண்பருக்கு அவசரத்துக்கு கடன் கொடுத்தாலும் வருமான வரித்துறை அபராதம் விதிக்குமா? இந்த சட்டங்களை முதலில் தெரிந்துகொள்ளுங்கள்
வரி ஆலோசனை தளமான TaxBuddy பகிர்ந்து கொண்ட சமீபத்திய வழக்கு, நண்பர்களிடையே மேற்கொள்ளப்படும் பெரிய ரொக்க பரிவர்த்தனைகள் கூட வருமான வரித்துறையிடம் இருந்து கடுமையான அபராதங்களை பெறுவதற்கான வாய்ப்பை வெளிப்படுத்தி உள்ளது.
முக்கிய திருத்தங்களுடன் மாற்றியமைக்கப்பட்ட வருமான வரி மசோதா 2025ஐ மக்களவையில் தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன்
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 11) அன்று மக்களவையில் மாற்றியமைக்கப்பட்ட வருமான வரி (எண்.2) மசோதா, 2025 ஐ அறிமுகப்படுத்தினார்.
உணவகங்கள் பதிவு செய்யும் போது சைவம், அசைவம் உள்ளிட்ட விவரங்கள் அவசியமாக வெளியிடப்படவேண்டும்
விரைவில், இந்திய உணவகங்கள், பதிவு செய்யும்போதோ உரிமத்தை புதுப்பிக்கும்போதோ, தங்களது உணவுப் வகைகள் மற்றும் மெனு விவரங்களை கட்டாயமாகத் தெரிவிக்க வேண்டிய உத்தரவு விரைவில் வெளியாகக்கூடும்.
30 லட்சம் விவசாயிகளுக்கு உதவ மத்திய அரசு ₹3,200 கோடி இழப்பீடு வழங்க உள்ளது
பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனா (PMFBY) திட்டத்தின் ஒரு பகுதியாக ₹3,200 கோடியை விடுவிப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
சவரனுக்கு ₹560 குறைவு; இன்றைய (ஆகஸ்ட் 11) தங்கம் வெள்ளி விலை நிலவரம்
கடந்த சில வாரங்களாகவே ஏற்ற இறக்கத்துடன் நீடிக்கும் தங்க விலை திங்கட்கிழமை (ஆகஸ்ட் 11) மீண்டும் சரிவைச் சந்தித்துள்ளது.
மக்களவையில் இன்று புதிய வருமான வரி மசோதாவை அறிமுகம்: என்ன மாற்றங்களை எதிர்பார்க்கலாம்?
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மக்களவையில் திருத்தப்பட்ட வருமான வரி மசோதா, 2025 ஐ அறிமுகப்படுத்துவார்.
விமானிகளின் ஓய்வு வயதை 58இல் இருந்து 65 ஆக உயர்த்தியது ஏர் இந்தியா
ஏர் இந்தியா ஒரு குறிப்பிடத்தக்க கொள்கை திருத்தத்தை அறிவித்து, அதன் விமானிகளின் ஓய்வூதிய வயதை 58 இலிருந்து 65 ஆண்டுகளாக உயர்த்தியுள்ளது.
அமெரிக்க வரி உயர்வால் பாதிப்பு; இந்திய இறால் ஏற்றுமதியாளர்கள் மத்திய அரசிடம் அவசர நிவாரணம் வழங்க கோரிக்கை
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் இந்திய இறால் ஏற்றுமதி மீதான வரிகளை உயர்த்த முடிவு செய்ததைத் தொடர்ந்து, இந்திய கடல் உணவு ஏற்றுமதி சங்கம் (SEAI) அவசர நிதி உதவிக்காக வர்த்தகம் மற்றும் நிதி அமைச்சகங்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்தியாவும் ஓமனும் விரைவில் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை அறிவிக்க உள்ளன
இந்தியாவும், ஓமனும் ஒரு சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை (FTA) இறுதி செய்யும் தருவாயில் உள்ளன என்று அதிகாரி ஒருவர் PTI இடம் தெரிவித்தார்.
புதிய வங்கி விதிகளை அறிவித்துள்ளது ICICI: மாற்றங்கள் என்ன?
புதிய சேமிப்புக் கணக்குகளுக்கான குறைந்தபட்ச சராசரி மாதாந்திர இருப்பு (Minimum monthly Average Balance- MAB) தேவையை ICICI வங்கி திருத்தியுள்ளது.
அமெரிக்கா உட்பட பல நாடுகளுடன் வர்த்தக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள இந்தியா
அமெரிக்கா உட்பட பல நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தங்களுக்கான பேச்சுவார்த்தைகளில் இந்தியா ஈடுபட்டுள்ளதாக வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 8 மாதங்களில் இல்லாத அளவுக்கு $9.3 பில்லியன் வாராந்திர வீழ்ச்சி
ஆகஸ்ட் 1 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு $9.3 பில்லியன் குறைந்து $688 பில்லியனாக இருந்தது.
எல்பிஜி இழப்புகளை ஈடுசெய்ய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு ₹30,000 கோடி வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு (OMCs) ஆதரவளிக்கும் ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, எரிவாயு சிலிண்டர் (எல்பிஜி) விற்பனையில் ஏற்படும் இழப்புகளை ஈடுசெய்ய ₹30,000 கோடி பட்ஜெட் ஒதுக்கீட்டை மத்திய அமைச்சரவை அங்கீகரித்துள்ளது.
வருமான வரி மசோதா, 2025, திரும்பப் பெறப்பட்டது; புதிய பதிப்பு திங்கட்கிழமை அமல்!
ஆறு தசாப்தங்களாகப் பழமை வாய்ந்த வருமான வரிச் சட்டம், 1961-ஐ மாற்றுவதற்காக கடந்த கடந்த பிப்ரவரி 13-ஆம் தேதி மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட வருமான வரி மசோதா, 2025-ஐ மத்திய அரசு திரும்பப் பெற்றுள்ளது.
இந்தியாவில் தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியது
இந்தியாவில் தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது.
எல்பிஜி விலையை கட்டுக்குள் வைக்க பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ.30,000 கோடி மானியம்; மத்திய அரசு திட்டம்
வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர் (எல்பிஜி) விலையை நிலையாக வைத்திருப்பதற்காக பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு (OMCs) கிட்டத்தட்ட ரூ.30,000 கோடி மதிப்புள்ள கணிசமான மானிய தொகுப்பை மத்திய அமைச்சரவை அங்கீகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உலகளாவிய வங்கியாக மாறுகிறது ஏயு சிறு நிதி வங்கி; கொள்கை அளவிலான ஒப்புதல் கொடுத்தது ஆர்பிஐ
இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ), ஏயு சிறு நிதி வங்கி லிமிடெட் (AUSFB) உலகளாவிய வங்கியாக மாறுவதற்கு கொள்கை ரீதியான ஒப்புதலை வழங்கியுள்ளது.
WaveForms AI என்ற ஆடியோ ஸ்டார்ட்-அப்பை வாங்குகிறது மெட்டா
ஆடியோவில் உணர்ச்சிகளைக் கண்டறிந்து பிரதிபலிக்க செயற்கை நுண்ணறிவை (AI) பயன்படுத்தும் ஸ்டார்ட்-அப் நிறுவனமான WaveForms AI-ஐ Meta Platforms கையகப்படுத்தியுள்ளது.
டிரம்பின் 50% வரிக்குப் பிறகு இந்தியாவிலிருந்து ஆர்டர்களை நிறுத்தும் வால்மார்ட், அமேசான்
வால்மார்ட், டார்கெட், அமேசான் மற்றும் கேப் போன்ற முன்னணி அமெரிக்க சில்லறை விற்பனையாளர்கள் இந்தியாவிலிருந்து வரும் ஆர்டர்களை நிறுத்தி வைத்துள்ளனர்.