
உணவகங்கள் பதிவு செய்யும் போது சைவம், அசைவம் உள்ளிட்ட விவரங்கள் அவசியமாக வெளியிடப்படவேண்டும்
செய்தி முன்னோட்டம்
விரைவில், இந்திய உணவகங்கள், பதிவு செய்யும்போதோ உரிமத்தை புதுப்பிக்கும்போதோ, தங்களது உணவுப் வகைகள் மற்றும் மெனு விவரங்களை கட்டாயமாகத் தெரிவிக்க வேண்டிய உத்தரவு விரைவில் வெளியாகக்கூடும். உணவுப் பாதுகாப்பு மற்றும் தரம் தொடர்பான சட்டங்களை மேலும் வெளிப்படையானதும், நுகர்வோர் நட்பு அம்சமாக மாற்றும் நோக்கில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிக்கைகள் தெரிவிக்கின்றன. உணவகங்கள் அதன் மெனு, சைவம்/அசைவம் வகை, மற்றும் மாடு அல்லது பன்றி இறைச்சி விற்பனை செய்யப்படுகிறதா என்பதையும் குறிப்பிட வேண்டும். அதேபோல எந்தவொரு சைவ உணவகமும் அசைவ உணவகமாக மாற திட்டமிட்டால், புதிய உரிமம் பெற விண்ணப்பிக்க வேண்டும்.
பரிசீலனை
உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் என்ன சொல்கிறார்கள்?
Livemint வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்த திட்டம் FSSAI (Indian Food Safety and Standards Authority) பரிசீலனையின் கீழ் உள்ளது. "கலாச்சார உணவுப் பழக்கவழக்கங்களுக்கு மரியாதை தெரிவிக்கவும், உணவகங்களில் வாடிக்கையாளர்கள் என்ன உணவுகளை வாங்குகிறார்கள் என்பதில் தெளிவு இருக்கவும் இந்த மாற்றம் வரலாம்," என பெயர் குறிப்பிட விரும்பாத அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக நியூஸ்18 செய்தி தெரிவிக்கிறது. மேலும், "வணிகங்கள் தங்கள் உணவுப் வகையை தெளிவாக குறிப்பிடுவதன் மூலம், நுகர்வோருக்கு அவர்களின் நம்பிக்கைகள் மற்றும் விருப்பங்களைப் பொருத்த தேர்வு செய்யும் சுதந்திரம் கிடைக்கும்" என்றும் அவர் கூறினார். புதிய விதிமுறைகள் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வந்த பிறகு, அவற்றை நடைமுறையில் அமல்படுத்தும் பொறுப்பு மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச நிர்வாகங்களுக்கு ஒப்படைக்கப்படும்.