LOADING...
சவரனுக்கு ₹560 குறைவு; இன்றைய (ஆகஸ்ட் 11) தங்கம் வெள்ளி விலை நிலவரம் 
இன்றைய (ஆகஸ்ட் 11) தங்கம் வெள்ளி விலை நிலவரம்

சவரனுக்கு ₹560 குறைவு; இன்றைய (ஆகஸ்ட் 11) தங்கம் வெள்ளி விலை நிலவரம் 

எழுதியவர் Sekar Chinnappan
Aug 11, 2025
10:24 am

செய்தி முன்னோட்டம்

கடந்த சில வாரங்களாகவே ஏற்ற இறக்கத்துடன் நீடிக்கும் தங்க விலை திங்கட்கிழமை (ஆகஸ்ட் 11) மீண்டும் சரிவைச் சந்தித்துள்ளது. திங்கட்கிழமை, சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ₹70 குறைந்து ₹9,375 க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ஒன்றுக்கு ₹560 குறைந்து ₹75,000 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ₹76 குறைந்து ₹10,228 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரன் ஒன்றுக்கு ₹608 குறைந்து, ₹81,824 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலையில் மாற்றமில்லை

18 காரட் தங்கத்தின் விலையும் குறைந்துள்ளது. 18 காரட் தங்கத்தின் விலை, தற்போது ஒரு கிராமுக்கு ₹60 குறைந்து ₹7,745 ஆகவும், ஒரு சவரனுக்கு ₹480 குறைந்து ₹61,960 ஆகவும் விற்கப்படுகிறது. இதற்கிடையே வெள்ளி விலை திங்கட்கிழமை எந்த மாற்றமும் இல்லாமல் முந்தைய நாள் விலையிலேயே நீடிக்கிறது. வெள்ளி விலை திங்கட்கிழமை நிலவரப்படி ஒரு கிராம் ₹127 ஆகவும், ஒரு கிலோ ₹1,27,000 ஆகவும் விற்பனை ஆகிறது. இதற்கிடையே, தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் நீடித்து வரும் நிலையில், டொனால்ட் டிரம்பின் வரி விதிப்பு அச்சுறுத்தல் உள்ளிட்ட தற்போதைய சர்வதேச சூழல்கள் காரணமாக, இன்னும் சில காலத்திற்கு இதேபோன்ற ஏற்ற இறக்க நிலையே நீடிக்கும் என சந்தை நிபுணர்கள் கணித்துள்ளனர்.