ஆட்டோ செய்தி
ஆட்டோமொபைல் துறையைப் பற்றிய அனைத்தையும் வெளிப்படுத்துகிறது - வாகன வெளியீடுகள், அவற்றின் விலைகள் புதிய விதிகள் வரை.
அமெரிக்காவில் தற்காலிகமாக மின்சார வாகன உற்பத்தியை நிறுத்திய வால்வோ கார் நிறுவனம்; காரணம் என்ன?
முக்கியமான கூறுகளின் பற்றாக்குறை காரணமாக, வால்வோ நிறுவனம் கடந்த வாரம் அமெரிக்காவின் தெற்கு கரோலினாவில் உள்ள ரிட்ஜ்வில்லில் உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்தியது.
மின்சார கார் உற்பத்தியை ஊக்குவிப்பதற்கான புதிய வழிகாட்டுதல் வெளியிட்டது மத்திய அரசு
உள்நாட்டு மின்சார வாகனத் துறையில் உலகளாவிய முதலீட்டை ஈர்ப்பதை நோக்கமாகக் கொண்ட பயணியர் மின்சார கார்களின் உற்பத்தியை ஊக்குவிக்கும் திட்டத்தின் கீழ், மத்திய அரசு திங்களன்று (ஜூன் 2) விரிவான வழிகாட்டுதல்களை வெளியிட்டது.
ஜூன் 2025இல் இந்தியாவில் முன்பதிவைத் தொடங்குகிறது வின்ஃபாஸ்ட் எலக்ட்ரிக் கார் நிறுவனம்
வியட்நாமிய மின்சார வாகன உற்பத்தி நிறுவனமான வின்ஃபாஸ்ட் இந்திய சந்தையில் நுழைய உள்ளது. அதன் VF6 மற்றும் VF7 மாடல்களுக்கான முன்பதிவுகள் இந்த மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் மே மாத விற்பனையில் 22 சதவீதம் வளர்ச்சி கண்ட டொயோட்டா கிர்லோஸ்கர் நிறுவனம்
டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் மே 2025 இல் 22% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
இந்தியாவில் 2025 மாடல் ஆஸ்டர் எஸ்யூவியை அறிமுகப்படுத்தியது எம்ஜி மோட்டார்
ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம், போட்டித்தன்மை வாய்ந்த நடுத்தர அளவிலான எஸ்யூவி பிரிவில் தனது நிலையை வலுப்படுத்தும் நோக்கில் 2025 ஆஸ்டர் மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது.
யமஹா இந்தியாவில் ₹975 விலையில் 5 ஆண்டு சாலையோர உதவித் திட்டம் அறிமுகம்; சிறப்புகள் என்னென்ன?
இந்தியா யமஹா மோட்டார் பிரைவேட் லிமிடெட், ₹975 விலையில் புதிய ஐந்து ஆண்டு சாலையோர உதவி (RSA) திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்திய சந்தையில் ஹோண்டா சிடி 110 டிரீம் விற்பனை நிறுத்தம்; காரணம் என்ன?
ஹோண்டா நிறுவனம் இந்திய இரு சக்கர வாகன சந்தையில் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக இருந்த அதன் நீண்டகால பயணிகள் மாடலான சிடி 110 டிரீமை எந்தவித அறிவிப்பும் இல்லாமல் நிறுத்தியுள்ளது.
இந்தியாவை விட்டு வெளியேறுகிறோமா? ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த நிசான் ஆட்டோமொபைல் நிறுவன சிஇஓ
நிசான் மோட்டார் இந்தியா நிறுவனம் இந்திய வாகன சந்தையிலிருந்து வெளியேறுவது குறித்த வதந்திகளை உறுதியாக நிராகரித்து, குறிப்பிடத்தக்க விரிவாக்கம் மற்றும் தயாரிப்பு மேம்பாட்டுத் திட்டங்களை அறிவித்துள்ளது.
மின்சார வாகன சந்தையில் நுழைந்தது கேடிஎம்; எலக்ட்ரிக் டியூக் மாடல் அறிமுகம்
கேடிஎம் நிறுவனம் அதன் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட எலக்ட்ரிக் பைக் இ-டியூக் மாடலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இது மின்சார இரு சக்கர வாகன சந்தையில் பிராண்டின் நுழைவைக் குறிக்கிறது.
வாழ்நாள் முழுவதும் பேட்டரிக்கு வாரண்ட்டி; மேட்டர் எலக்ட்ரிக் பைக் நிறுவனம் அதிரடி அறிவிப்பு
மின்சார வாகன சந்தையில் ஒரு முக்கிய நுகர்வோர் கவலையை நிவர்த்தி செய்யும் நோக்கில் ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, இந்திய எலக்ட்ரிக் பைக் உற்பத்தியாளர் மேட்டர் அதன் மின்சார மோட்டார் சைக்கிளான ஏராவுக்கு (Aera) வாழ்நாள் பேட்டரி உத்தரவாதத்தை அறிவித்துள்ளது.
அடிக்கடி பயணிப்பவர்களுக்கு FASTag வருடாந்திர பாஸ் எவ்வாறு பயன் தரும்?
இந்தியாவின் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் (MoRTH) ஒரு புதிய சுங்கக் கொள்கையை பரிசீலித்து வருவதாகக் கூறப்படுகிறது.
மே மாத இறுதிவரை நின்ஜா ZX-4R பைக்கிற்கு க்கு ரூ.40,000 தள்ளுபடியை அறிவித்தது கவாஸாகி
மே 2025க்கான அதன் உயர் செயல்திறன் கொண்ட நிஞ்சா ZX-4R-க்கு ரூ.40,000 வரையறுக்கப்பட்ட கால தள்ளுபடியை கவாஸாகி அறிவித்துள்ளது.
அமேசானுக்குச் சொந்தமான Zoox, அமெரிக்காவில் அதன் ரோபோடாக்சிகளை திரும்ப பெறுகிறது; ஏன்?
அமேசானுக்குச் சொந்தமான தன்னாட்சி வாகன நிறுவனமான Zoox, ஒரு மாதத்தில் இரண்டாவது முறையாக தன்னார்வமாக வாகனங்களை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.
மஹிந்திரா BE 6 ரியர் வியூ கண்ணாடி விலை மட்டும் இவ்ளோவா? இதுக்கு ஸ்பிளெண்டர் பிளஸ் பைக்கே வாங்கிடலாமே!
மஹிந்திராவின் முதல் மின்சார எஸ்யூவி காரான, BE 6, நவம்பர் 2024 இல் அறிமுகப்படுத்தப்பட்டது, ஆரம்பத்தில் முதல் நாளில் 13,000 க்கும் மேற்பட்ட முன்பதிவுகளுடன் அமோக வரவேற்பைப் பெற்றது.
என்ஜின் குறைபாட்டால் நம்பகத்தன்மையை இழந்து நிற்கும் ஆர்எஸ் 457 பைக்; ஏப்ரிலியா நிறுவனம் அறிக்கை
2023 ஆம் ஆண்டு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட அதன் ஆர்எஸ் 457 பைக்கின் நம்பகத்தன்மை குறித்து நுகர்வோர் மத்தியில் ஏற்பட்டுள்ள கவலைகளை நிவர்த்தி செய்யும் வகையில், ஏப்ரிலியா வெளியிட்டுள்ளது.
வாகனங்களில் ஜெமினி ஏஐ இணைக்கப்படும் உலகின் முதல் கார் நிறுவனமானது வால்வோ; வெளியானது அறிவிப்பு
I/O 2025 இல் கூகுளின் அறிவிப்பைத் தொடர்ந்து, ஸ்வீடிஷ் ஆட்டோமொபைல் நிறுவனமான வால்வோ, கூகுளின் ஜெமினி ஏஐ சாட்பாட்டை அதன் வாகனங்களில் ஒருங்கிணைப்பதை உறுதிப்படுத்திய முதல் கார் உற்பத்தியாளராக மாறியுள்ளது.
இந்த ஹோண்டா ஸ்கூட்டரின் விலை ₹12 லட்சம்: அதன் அம்சங்களை தெரிந்துகொள்ளுங்கள்
ஹோண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா (HMSI) இந்திய சந்தையில் பிரீமியம் X-ADV சாகச ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது.
கவாசாகி எலிமினேட்டருக்கு போட்டியாக ரெபெல் 500 க்ரூஸரை இந்தியாவில் அறிமுகம் செய்தது ஹோண்டா
ஹோண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரெபெல் 500 க்ரூஸரை ₹5.12 லட்ச எக்ஸ்-ஷோரூம் விலையில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.
ஜூன் 3 ஆம் தேதி டாடா ஹாரியர் EV அறிமுகம்: என்ன எதிர்பார்க்கலாம்?
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஜூன் 3 ஆம் தேதி தனது முழு மின்சார எஸ்யூவியான ஹாரியர் EV-யை இந்தியாவில் அறிமுகப்படுத்தவுள்ளது.
2025 அவெனிஸ் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியது சுஸூகி; விலை எவ்ளோ தெரியுமா?
சுஸூகி மோட்டார்சைக்கிள் இந்தியா பிரைவேட் லிமிடெட் அதன் ஸ்போர்ட்டி ஸ்கூட்டரான அவெனிஸின் 2025 பதிப்பை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
மழைக்காலங்களில் கார்களை பாதுகாப்பாக பராமரிப்பது எப்படி? நாம் தெரிந்துகொள்ள வேண்டியவை
இந்தியாவில் தென்மேற்கு பருவமழை காலம் மே 27 ஆம் தேதி தொடங்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், மழைக்காலத்தில் வானிலை தொடர்பான கார் பிரச்சனைகளைத் தவிர்க்க வாகன உரிமையாளர்கள் அத்தியாவசிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
நேபாளத்திற்கு 15 டாடா கர்வ்வ் மின்சார கார்களை பரிசாக வழங்கியது இந்தியா; எதற்காக தெரியுமா?
நெருக்கமான இருதரப்பு உறவுகள் மற்றும் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான ஒத்துழைப்பு ஆகிய்வற்றைக் குறிக்கும் ஒரு நடவடிக்கையாக, இந்திய அரசு 15 டாடா கர்வ்வ் இவி மின்சார வாகனங்களை நேபாள அரசாங்கத்திடம் ஒப்படைத்துள்ளது.
இந்திய சிஎன்ஜி வாகன சந்தையில் அறிமுகமாகும் சிட்ரோயன்; சி3 ஹேட்ச்பேக்கிற்கான சிஎன்ஜி கிட் வெளியீடு
சிட்ரோயன் இந்தியா அதன் சி3 ஹேட்ச்பேக்கிற்கான மறுசீரமைப்பு சிஎன்ஜி கிட்டை அறிமுகப்படுத்துவதன் மூலம் சிஎன்ஜி வாகனப் பிரிவில் அதிகாரப்பூர்வமாக இறங்கியுள்ளது.
இந்தியவில் ஏன் திடீரென்று ஜாகுவார் லேண்ட் ரோவர் விற்பனை மந்தமாகியுள்ளது?
இங்கிலாந்து-இந்தியா சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (FTA) அறிவிக்கப்பட்டதிலிருந்து ஜாகுவார் லேண்ட் ரோவர் (JLR) அதன் இந்திய விற்பனையில் மந்தநிலையைக் காண்கிறது.
மாருதி சுஸுகியின் அரினா இப்போது 6 ஏர்பேக்குகளுடன் வருகிறது
பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான ஒரு முக்கிய படியாக, மாருதி சுஸுகி அதன் பிரபலமான அரினா மாடல்களில் ஆறு ஏர்பேக்குகளைச் சேர்த்துள்ளது.
மின்சார வாகன அசெம்பிளி ஆலையை நிறுவ டெஸ்லா மகாராஷ்டிராவில் இடம் தேடுகிறது
எலான் மஸ்க்கின் மின்சார வாகன (EV) நிறுவனமான டெஸ்லா, மகாராஷ்டிராவின் சதாராவில் நிலத்தைத் தேடுவதாகக் கூறப்படுகிறது.
டிவிஎஸ்ஸின் மலிவு விலை எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விரைவில் அறிமுகம்; முக்கிய அம்சங்கள்
இந்தியாவின் வேகமாக வளர்ந்து வரும் மின்சார வாகன சந்தையில் தனது இருப்பை விரிவுபடுத்தும் நோக்கில், டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் ஒரு புதிய பட்ஜெட்டுக்கு ஏற்ற மின்சார ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தத் தயாராகி வருகிறது.
இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் மூலம் இயங்கும் டிரக்கை அறிமுகப்படுத்தியது அதானி; சிறப்பம்சங்கள் என்ன?
நிலையான தொழில்துறை நடைமுறைகளை நோக்கிய ஒரு முக்கிய படியாக, அதானி குழுமம் இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் எரிபொருள் மூலம் இயங்கும் டிரக்கை சத்தீஸ்கரில் உள்ள அதன் சுரங்க தளவாட நடவடிக்கைகளில் அறிமுகப்படுத்தியுள்ளது.
ஜூன் 2025இல் மெர்சிடீஸ்-பென்ஸ் கார்களின் விலை ₹12.2 லட்சம் வரை உயர்த்தப்படும் என அறிவிப்பு
அந்நிய செலாவணி ஏற்ற இறக்கம் மற்றும் அதிகரித்து வரும் மூலப்பொருள் செலவுகளைக் காரணம் காட்டி, மெர்சிடீஸ்-பென்ஸ் இந்தியா அதன் அனைத்து மாடல்களுக்கும் இரண்டு கட்ட விலை உயர்வை உறுதிப்படுத்தியுள்ளது.
டெஸ்லாவின் இந்தியா பிரிவு தலைவர் பிரசாந்த் மேனன் திடீர் ராஜினாமா; காரணம் என்ன?
டெஸ்லா நிறுவனத்தின் இந்தியா பிரிவு தலைவர் பிரசாந்த் மேனன், நிறுவனம் இந்திய சந்தையில் அதிகாரப்பூர்வமாக நுழையத் தயாராகி வரும் நிலையில், தனது பதவியில் இருந்து விலகியுள்ளார் என்று ப்ளூம்பெர்க் அறிக்கை தெரிவிக்கிறது.
இனி எலக்ட்ரிக் வாகனங்களுக்கும் வயர்லெஸ் சார்ஜிங்; புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கியது இந்தியா
இந்தியாவின் மின்சார வாகன ஈக்கோசிஸ்டத்தை வலுப்படுத்துவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க படியாக, மேம்பட்ட கணினி மேம்பாட்டு மையம் (C-DAC) மற்றும் VNIT நாக்பூர் இணைந்து உருவாக்கிய உள்நாட்டு வயர்லெஸ் சார்ஜிங் தொழில்நுட்பத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
இங்கிலாந்து உடனான வர்த்தக ஒப்பந்தம் இந்தியாவில் வாகன உற்பத்தியாளர்களை எவ்வாறு பாதிக்கும்
இந்தியாவிற்கும், இங்கிலாந்துக்கும் இடையில் கையெழுத்தான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (FTA) இங்குள்ள ஆட்டோமொபைல் துறையில் நம்பிக்கை அலையை உருவாக்கி வருகிறது.
கடந்த ஆண்டு இந்தியாவில் புதிய கார்களை விட, பயன்படுத்திய சொகுசு கார்கள் தான் அதிக அளவில் விற்பனையாகியுள்ளன
ஆச்சரியப்படத்தக்க ஒரு போக்கில், இந்தியாவின் சொகுசு கார் சந்தையில் பழைய கார்கள் விற்பனை, புதிய கார் வாங்குவதை விட அதிகமாக உயர்ந்துள்ளது.
சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ₹1.5 லட்சம் வரை ரொக்கமில்லா சிகிச்சை: மத்திய அரசு அறிவிப்பு
நாடு முழுவதும் சாலை விபத்துக்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பணமில்லா மருத்துவ சிகிச்சை வழங்கும் திட்டத்தை மத்திய அரசு செவ்வாய்க்கிழமை அறிவித்தது.
போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டால் அபராத புள்ளிகள்; புதிய முறையை அமல்படுத்த மத்திய அரசு திட்டம்
சாலை விபத்துகளைக் குறைப்பது மற்றும் போக்குவரத்துச் சட்ட விதிகள் அமலாக்கத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, ஓட்டுநர் உரிமங்களுக்கான நெகட்டிவ் புள்ளிகள் அடிப்படையிலான முறையை மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் செயல்படுத்த உள்ளது.
ஓலாவின் ரோட்ஸ்டர் எக்ஸ் பைக் டெலிவரி செய்வதில் மீண்டும் தாமதம் என தகவல்; காரணம் என்ன?
ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் அதன் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரோட்ஸ்டர் எக்ஸ் எலக்ட்ரிக் பைக் டெலிவரியில் தாமதம் ஏற்படுவதாக அறிவித்துள்ளது.
சென்னைக்கு வரப்போகுது சொகுசு பயணம்; 26 மணி நேரத்திற்குள் 1,662 கி.மீ தூரத்தை கடக்கும் அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ்!
இந்திய ரயில்வே 2025-26 நிதியாண்டில் ஹவுரா மற்றும் சென்னை உள்ளிட்ட பல்வேறு வழித்தடங்களில் 50 அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை அறிமுகப்படுத்த உள்ளது.
எலக்ட்ரிக் கார் வாங்க திட்டமா? ரூ1.7 லட்சம் வரை தள்ளுபடி அறிவித்தது டாடா மோட்டார்ஸ்
இந்தியாவின் வளர்ந்து வரும் எலக்ட்ரிக் வாகன சந்தையில் போட்டி அதிகரித்து வரும் நிலையில், விற்பனையை விரைவுபடுத்தும் நோக்கில், மே மாதத்திற்கான அதன் மின்சார வாகன வரம்பில் டாடா மோட்டார்ஸ் குறிப்பிடத்தக்க தள்ளுபடிகளை அறிவித்துள்ளது.
ஏப்ரல் மாதத்தில் 33% வீழ்ச்சியை சந்தித்த அசோக் லேலண்ட் விற்பனை; காரணம் என்ன?
இந்தியாவின் முன்னணி வணிக வாகன உற்பத்தியாளர்களில் ஒன்றான அசோக் லேலண்ட், ஏப்ரல் 2025 இல் மொத்த விற்பனை அளவில் 33% சரிவை பதிவு செய்துள்ளது.
ஜீப் காம்பஸ் EV இப்படித்தான் இருக்கும்
ஜீப் அடுத்த வாரம் புதிய காம்பஸ் மாடலை வெளியிடத் தயாராக உள்ளது, ஆனால் கசிந்த படங்கள் ஏற்கனவே அதன் வடிவமைப்பை முழுதாக வெளிப்படுத்தியுள்ளன.