
சேப்பாக்கத்தில் இது தான் டாப்: பவர்பிளேயில் உச்சபட்ச ஸ்கோரை பதிவு செய்த சிஎஸ்கே
செய்தி முன்னோட்டம்
ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் டெவோன் கான்வே லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (எல்எஸ்ஜி) அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணிக்காக பவர்பிளேயில் புதிய சாதனை படைத்துள்ளனர்.
கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு சிஎஸ்கே தனது சொந்த மைதானத்தில் திங்கட்கிழமை (ஏப்ரல் 3) எல்எஸ்ஜி அணிக்கு எதிராக விளையாடியது.
டாஸ் வென்ற எல்எஸ்ஜி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்த நிலையில், ஆரம்பம் முதலே கெய்க்வாட் மற்றும் கான்வே எல்எஸ்ஜி பந்துவீச்சை நிலைகுலையச் செய்தனர்.
குறிப்பாக கிருஷ்ணப்ப கவுதம் ஓவரில் 20 ரன்கள் எடுத்ததன் மூலம் கெய்க்வாட் எல்எஸ்ஜி பந்துவீச்சாளர்களை விளாசத் தொடங்கினார்.
சேப்பாக்கம்
சேப்பாக்கத்தில் சிஎஸ்கேவின் அதிகபட்ச பவர்பிளே ஸ்கோர்
குஜராத் டைட்டன்சுக்கு எதிரான முதல் போட்டியில் சொதப்பிய கான்வே, இந்தமுறை கெய்க்வாட்டுடன் சேர்ந்து சிறப்பாக ஆடியதில் பவர்பிளே முடிவில், சிஎஸ்கே விக்கெட் இழப்பின்றி 79 ரன்கள் சேர்த்தது.
இது சேப்பாக்கம் மைதானத்தில் பவர்பிளேயில் சிஎஸ்கேவின் அதிகபட்ச ஸ்கோராகும்.
முன்னதாக, 2018 சீசனில் கேகேஆருக்கு எதிராக அம்பதி ராயுடு மற்றும் ஷேன் வாட்சன் ஆகியோர் சேஸிங்கில் 75 ரன்கள் எடுத்ததே சிறந்த ஸ்கோராக இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் 79 ரன்கள் எடுத்ததன் மூலம் பவர்பிளே ஓவர்களில் சிஎஸ்கே ஒட்டுமொத்தமாக தனது மூன்றாவது அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்துள்ளது.