ஐபிஎல்லில் அதிக வெற்றி விகிதத்தை கொண்ட அணி எனும் சாதனையை தக்கவைத்துள்ள சிஎஸ்கே
2023 ஐபிஎல் வெள்ளிக்கிழமை (மார்ச் 31)தொடங்க உள்ள நிலையில் சிஎஸ்கே ஐந்தாவது பட்டத்திற்காக மோத உள்ளது. வெள்ளிக்கிழமை சிஎஸ்கே தனது முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸை எதிர்கொள்ள உள்ள நிலையில், நாம் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான அணியின் புள்ளிவிவரங்கள் இங்கே பின்வருமாறு:- சிஎஸ்கே இதுவரை 196 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில், 117 வெற்றிகள், 77 தோல்விகள் மற்றும் 2 போட்டிகள் முடிவில்லாதவை என 59.69 வெற்றி சதவீதத்துடன், ஐபிஎல்லில் அதிக வெற்றி விகிதத்தை கொண்ட அணியாக உள்ளது. 2010,2011,2018 மற்றும் 2021 என நாகு முறை கோப்பையை கைப்பற்றியுள்ளது. மேலும் 2008, 2012, 2013, 2015 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் ஐந்து முறை இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளனர்.
இறுதிப்போட்டியில் அதிகமுறை விளையாடிய அணி
2016 மற்றும் 2017இல் சஸ்பெண்ட் செய்யப்பட்டு இரண்டு சீசன்களைத் தவறவிட்டாலும், ஐபிஎல் இறுதிப் போட்டிகளில் (9) அதிக முறை விளையாடிய அணி என்ற சாதனையை சிஎஸ்கே பெற்றுள்ளது. ஐந்து முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் ஐபிஎல் இறுதிப்போட்டிகளில் ஆறு முறை தான் நுழைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக தொடர்ந்து இரு பட்டங்களை (2010 மற்றும் 2011) வென்ற முதல் அணியும் சிஎஸ்கே தான். 210 போட்டிகளில் சிஎஸ்கே அணிக்கு தலைமை தாங்கிய தோனி ஐபிஎல் தொடரில் அதிக முறை கேப்டனாக இருந்துள்ளார். கேப்டனாக (123) போட்டியில் 100க்கு மேற்பட்ட வெற்றிகளைப் பெற்ற ஒரே வீரர் தோனி தான் என்பது குறிப்பிடத்தக்கது.