அடுத்த செய்திக் கட்டுரை

மார்ச் 31 ஆம் தேதி தொடங்குகிறது ஐபிஎல் : முதல் போட்டியில் சிஎஸ்கே vs ஜிடி!!
எழுதியவர்
Sekar Chinnappan
Feb 17, 2023
07:06 pm
செய்தி முன்னோட்டம்
இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2023 போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, முதல் போட்டி மார்ச் 31 ஆம் தேதி தொடங்குகிறது.
முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் சென்னை சூப்பர் கிங்ஸை அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் எதிர்கொள்கிறது.
அனைத்து அணிகளும் ஏழு போட்டிகளை உள்ளூர் மைதானங்களிலும், ஏழு போட்டிகளை வெளியூர் மைதானங்களிலும் விளையாட உள்ளது.
அகமதாபாத், மொஹாலி, லக்னோ, ஹைதராபாத், பெங்களூரு, சென்னை, டெல்லி, கொல்கத்தா, ஜெய்ப்பூர், மும்பை, கவுகாத்தி மற்றும் தர்மசாலா ஆகிய 12 மைதானங்களில் போட்டிகள் நடைபெறுகின்றன.
கடைசி லீக் ஆட்டம் மே 21 ஆம் தேதி நடக்க உள்ள நிலையில், இறுதி ஆட்டம் மே 28 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்.
ட்விட்டர் அஞ்சல்
ஐபிஎல் 2023 முழு போட்டி அட்டவணை
Full schedule of IPL 2023. pic.twitter.com/9WdSMFejBG
— Johns. (@CricCrazyJohns) February 17, 2023