"இது எங்க ஏரியா" : சிஎஸ்கேவுக்கு ராசியான சேப்பாக்கம் மைதானம்! கடந்த கால புள்ளி விபரங்கள்!
சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அவர்களின் சொந்த மைதானமான சேப்பாக்கம் எம்ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் மறக்க முடியாத பல சாதனைகளை படைத்துள்ளனர். சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளில் சிஎஸ்கே மிகச் சிறந்த வெற்றி-தோல்வி விகிதத்தைக் கொண்டுள்ளது. இந்த மைதானத்தில் சிஎஸ்கே மொத்தம் 59 ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய நிலையில், 40 போட்டிகளில் வெற்றியும், 19 போட்டிகளில் தோல்வியும் கண்டுள்ளது. 2010ல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக சிஎஸ்கே எடுத்த 246/5 ஸ்கோர் தான் இந்த மைதானத்தில் ஒரு அணியின் அதிகபட்ச ஸ்கோராக உள்ளது. 2011 இல் சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த இறுதிப்போட்டியில் ஆர்சிபியை வீழ்த்தி தொடர்ந்து இரண்டாவது முறையாக கோப்பையை வென்றது.
சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களின் தனிநபர் சாதனைகள்
ஐபிஎல்லில் இந்த மைதானத்தில் 2018 இல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக ஷேன் வாட்சன் எடுத்த 117 (நாட் அவுட்) தான் சிஎஸ்கே வீரரின் அதிகபட்ச தனிநபர் ஸ்கோராக உள்ளது. 2010 இல் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக முரளி விஜய் (56 பந்துகளில் 127) 385.71 என்ற ஸ்ட்ரைக் ரேட்டுடன் ஒரு இன்னிங்ஸில் சிறந்த பேட்டிங் ஸ்டிரைக் ரேட் (குறைந்தபட்ச 20 பந்துகளை எதிர்கொண்டது) கொண்டவராக உள்ளார். ஐபிஎல் 2012 இல் கிங்ஸ் லெவன் பஞ்சாப்க்கு எதிராக ஆல்பி மோர்கல் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியது ஒரு இன்னிங்ஸில் சிறந்த பந்துவீச்சாகும். எம்.எஸ்.தோனி 52 போட்டிகளில் விளையாடியுள்ளதே சேப்பாக்கத்தில் சிஎஸ்கே வீரர் ஒருவர் பங்கேற்ற அதிகபட்ச போட்டிகளாகும்.