ஐபிஎல் : பர்ப்பிள் கேப்பை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களின் பட்டியல்
ஐபிஎல் தொடரில் வெற்றிகரமான அணிகளில் ஒன்றாக இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியின் வீரர்கள் இதுவரை நான்கு முறை பர்ப்பிள் கேப்பை பெற்றுள்ளனர். பர்ப்பிள் கேப் என்பது ஒவ்வொரு சீசனிலும் அதிக விக்கெட்டுகள் எடுக்கும் வீரர்களுக்கு வழங்கப்படுகிறது. அந்த வகையில் சிஎஸ்கே அணி வீரர்கள் இது வரை நான்கு முறை பர்ப்பிள் கேப்பை பெற்றுள்ளனர். சென்னை அணியை பொறுத்தவரை 2013 முதல் 2015 வரை மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாகவும், 2019இல் ஒருமுறையும் பர்ப்பிள் கேப்பை கைப்பற்றியுள்ளது. 2013இல் 32 விக்கெட்டுகள் எடுத்து டுவைன் பிராவோ முதல் முறையாக கைப்பற்றினார்.
ஐபிஎல்லில் அதிக முறை பர்ப்பிள் கேப் வென்ற வீரர்
2014 இல் மொஹிந்தர் சர்மா 23 விக்கெட்டுகளை எடுத்து பர்ப்பிள் கேப்பை வென்ற நிலையில், 2015 ஆன் ஆண்டு டுவைன் பிராவோ 26 விக்கெட்டுகளுடன் இரண்டாவது முறையாக பர்ப்பிள் கேப் வென்றார். இதையடுத்து 2019 இல் இம்ரான் தாஹிர் 26 விக்கெட்டுகளை எடுத்து பர்ப்பிள் கேப்பை வென்றுள்ளார். பர்ப்பிள் கேப்பை டுவைன் பிராவோ மற்றும் புவனேஷ்வர் குமார் அதிகபட்சமாக தலா 2 முறை வென்றுள்ளனர். மேலும் யுஸ்வேந்திர சாஹல், ஹர்ஷல் படேல், ககிஸோ ரபாடா, ஆண்ட்ரே டை, மோர்னே மார்க்கெல், லசித் மலிங்கா, பிரக்யான் ஓஜா, ஆர்பி சிங் மற்றும் சொஹைல் தன்வீர் தலா ஒருமுறை கைப்பற்றியுள்ளனர்.