
ஐபிஎல்லில் 5,000 ரன்கள் அடித்து எம்.எஸ்.தோனி சாதனை
செய்தி முன்னோட்டம்
ஐபிஎல் 2023 தொடரில் எம்.எஸ்.தோனி திங்களன்று (ஏப்ரல் 3) சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணிக்காக இரண்டு சிக்ஸர்கள் அடித்ததோடு, புதிய சாதனையையும் படைத்துள்ளார்.
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான ஆறாவது போட்டியின் போது அவர் 5,000 ஐபிஎல் ரன்கள் எனும் மைல்கல்லை எட்டி, இதை செய்த ஏழாவது பேட்ஸ்மேன் என்ற சாதனையை படைத்தார்.
இதுவரை ஐபிஎல்லில் சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி 39.09 சராசரியில் 5,004 ரன்கள் குவித்துள்ளார்.
84* என்ற சிறந்த ஸ்கோருடன் 24 அரைசதங்கள் அடித்துள்ளார். தோனியின் ஸ்ட்ரைக் ரேட் 135.53 ஆகும்.
எம்.எஸ்.தோனி
இறுதி ஓவரில் 55 சிக்ஸர்கள் விளாசிய தோனி
ஐபிஎல் போட்டிகளில் இன்னிங்ஸின் கடைசி ஓவரில் மட்டும் தோனி இதுவரை 55 சிக்சர்களை அடித்துள்ளார். 277 பந்துகளில் இதை செய்துள்ளார்.
இந்த பட்டியலில் தோனிக்கு அடுத்தபடியாக மும்பை இந்தியன்ஸ் (எம்ஐ) அணியின் முன்னாள் வீரர் கீரன் பொல்லார்டு 189 பந்துகளில் 33 சிக்ஸர்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
இதற்கிடையே தோனி சேப்பாக்கத்தில் 42.96 சராசரியில் 1,375 ஐபிஎல் ரன்களை எடுத்துள்ளார். இங்கு அவரது ஸ்ட்ரைக் ரேட் 143.97 ஆக உள்ளது.
2008 ஐபிஎல் தொடங்கியது முதல் சிஎஸ்கேவின் கேப்டனாக இருந்து வரும் தோனிக்கு இது கடைசி சீசனாக இருக்கும் என கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.