ஐபிஎல் 2023 : காயத்தால் வெளியேறியுள்ள டாப் 5 வீரர்கள்
இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 16வது சீசன் மார்ச் 31ஆம் தேதி தொடங்க உள்ளது. நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ், நான்கு முறை வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் வெள்ளிக்கிழமை (மார்ச் 31) நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் மோதுகிறது. போட்டி தொடங்குவதற்கு முன்னதாக, காயம் காரணமாக போட்டியில் இருந்து வெளியேறியுள்ள வீரர்களின் பட்டியல் பின்வருமாறு:- ஜஸ்பிரித் பும்ரா: இந்தியன் பிரீமியர் லீக்கில் மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றிக்குப் பின்னால் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா முக்கிய பங்கு வகித்துள்ளார். இருப்பினும், முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக பும்ரா வரவிருக்கும் ஐபிஎல் சீசனில் இருந்து பும்ரா முழுமையாக விலகியுள்ளார்.
விபத்தில் சிக்கியதால் ஐபிஎல்லில் இருந்து வெளியேறிய ரிஷப் பந்த்
ரிஷப் பந்த்: 2022 டிசம்பர் இறுதியில் ரிஷப் பந்த் தனது சொந்த ஊரான ரூர்க்கிக்கு பயணம் செய்யும் போது ஒரு பயங்கரமான கார் விபத்தில் படுகாயத்துடன் உயிர் தப்பினார். சில காலம் அவர் முழுமையாக ஓய்வெடுக்க வேண்டி உள்ளதால், அவருக்கு பதிலாக டேவிட் வார்னர் கேப்டனாக நியமிக்கப்பட்டு உள்ளார். ஜானி பேர்ஸ்டோ: டி20யில் மிகச்சிறந்த வீரர்களில் ஒருவராக இருக்கும் பேர்ஸ்டோ, காயம் காரணமாக விலகியுள்ளார். கைல் ஜேமிசன்: 2022 மினி ஏலத்தின்போது சிஎஸ்கே அணியால் வாங்கப்பட்ட ஜேமிசன் முதுகில் ஏற்பட்ட காயத்தால் விலகியுள்ளார். ஷ்ரேயாஸ் ஐயர்: முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக கேகேஆர் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர்விலகியுள்ளார். அவருக்கு பதிலாக கேகேஆர் அணியின் கேப்டனாக நட்சத்திர பேட்டர் நிதிஷ் ராணாவை நியமித்துள்ளது.