Page Loader
முடிவுக்கு வந்தது காஷ்மீர் பயங்கரவாத என்கவுண்டர்: கொல்லப்பட்டார் பயங்கரவாதி உசைர் கான்
7 நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வந்த அனந்த்நாக் என்கவுண்டருக்கு ஒரு முடிவு கிடைத்துள்ளது

முடிவுக்கு வந்தது காஷ்மீர் பயங்கரவாத என்கவுண்டர்: கொல்லப்பட்டார் பயங்கரவாதி உசைர் கான்

எழுதியவர் Sindhuja SM
Sep 19, 2023
03:03 pm

செய்தி முன்னோட்டம்

இந்திய வரலாற்றிலேயே முதல்முறையாக அதிக நாட்களாக நடந்து வந்த காஷ்மீர்-அனந்த்நாக் பயங்கரவாத என்கவுண்டர் முடிவுக்கு வந்தது. லஷ்கர்-இ-தொய்பா என்னும் பயங்கரவாத அமைப்பின் கமாண்டர் உசைர் கான் கொல்லப்பட்டதை அடுத்து, 7 நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வந்த அனந்த்நாக் என்கவுண்டருக்கு ஒரு முடிவு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொல்லப்பட்ட பயங்கரவாதியிடம் இருந்து மற்றொரு நபரின் உடலையும் ஆயுதம் ஒன்றையும் பாதுகாப்பு அதிகாரிகள் கைப்பற்றியதாக போலீஸ் ஏடிஜிபி விஜய் குமார் தெரிவித்துள்ளார். "LeT கமாண்டர் உசைர் கானின் ஆயுதம் மீட்கப்பட்டதன் மூலம் அவர் கொல்லப்பட்டார். மேலும், மற்றொரு தீவிரவாதியின் உயிரற்ற உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அனந்த்நாக் என்கவுன்டர் முடிவுக்கு வந்துவிட்டது" என்று போலீஸ் ஏடிஜிபி விஜய் குமார் கூறியுள்ளார்.

டவ்ஜ்க்க்

பயங்கரவாதிகளை தகர்ககும் நடவடிக்கையில் 4 இந்திய வீரர்கள் பலி 

கோகர்நாக் காடுல் வனப்பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளை தகர்க்க ராணுவம் மற்றும் காவல்துறை இணைந்து ஒரு கூட்டு நடவடிக்கையை கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கியது. செவ்வாய்க்கிழமை இரவு தொடங்கிய துப்பாக்கிச் சண்டை 7 நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்நிலையில், அப்பகுதியில் பதுங்கி இருந்த மிக முக்கிய பயங்கரவாதியான LeT கமாண்டர் உசைர் கான் தகர்க்கப்பட்டுள்ளார். உசைர் அகமது கான்(28),அனந்த்நாக்கில் உள்ள நாகம் கோகர்நாக்கில் வசித்து வந்தவர் ஆவார். இவர் ஜூலை 26, 2022க்கு பிறகு தலைமறைவாகிவிட்டார். சமீபத்தில், இவர் கோகர்நாக் காடுல் வனப்பகுதியில் பதுங்கியிருப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, ராணுவம் மற்றும் காவல்துறை இணைந்து ஒரு கூட்டு நடவடிக்கையை தொடங்கியது. இந்த என்கவுண்டர் நடவடிக்கையில், இதுவரை நான்கு இந்திய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.