Page Loader
மகளிர் இடஒதுக்கீடு மசோதாவில் முன்மொழியப்பட்டுள்ள முக்கிய விதிகள்: முழு விவரம் 
இன்று ஆதிகாரபூர்வமாக இந்திய சட்டமன்றம் புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு மாற்றப்பட்டது.

மகளிர் இடஒதுக்கீடு மசோதாவில் முன்மொழியப்பட்டுள்ள முக்கிய விதிகள்: முழு விவரம் 

எழுதியவர் Sindhuja SM
Sep 19, 2023
02:57 pm

செய்தி முன்னோட்டம்

26 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை இன்று(செப் 19) மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் மக்களவையில் அறிமுகப்படுத்தினார். 'நாரி சக்தி வந்தான் ஆதினியம்' என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த மசோதா, மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை உறுதி செய்கிறது. இன்று ஆதிகாரபூர்வமாக இந்திய சட்டமன்றம் புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு மாற்றப்பட்டது. இதனையடுத்து, புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் தனது முதல் உரையை ஆற்றிய பிரதமர் மோடி, "முக்கியமான அரசியலமைப்பு திருத்த மசோதாவைக் கொண்டு வருவதாக" அறிவித்தார். பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை முன்னெடுக்க இந்த மசோதாவை ஒருமனதாக மக்களவையில் நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

ஸ்ஜ்க்ன்மேல்

என்னென்ன விதிகள் இந்த மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது?

இந்த மசோதா மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்கும். ஆனால் ராஜ்யசபாவுக்கு இந்த விதி பொருந்தாது. பட்டியலினத்தவருக்கும் பழங்குடியினருக்கும் ஒதுக்கப்பட்ட இடங்களில் மூன்றில் ஒரு பங்கு பெண்களுக்கு ஒதுக்கப்படும். இரண்டு பெண் எம்.பி.க்கள் ஒரு தொகுதியில் போட்டியிட அனுமதிக்கப்பட மாட்டார்கள். OBC பிரிவை சேர்ந்த பெண்களுக்கான இடஒதுக்கீடு இந்த மசோதாவில் அடங்காது. இந்த மசோதா இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்படுகிறது. 2026க்குப் பிறகு எடுக்கப்படும் முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பிற்கு பின் நடத்தப்படும் அடுத்த எல்லை நிர்ணய நடவடிக்கைக்குப் பிறகுதான் இந்த சட்டம் நடைமுறைக்கு வரும். மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளில் பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களின் சுழற்சி ஒவ்வொரு எல்லை நிர்ணய நடவடிக்கைக்குப் பிறகும் நடைபெறும்.