Page Loader
ஜம்மு காஷ்மீரின் முதல் பெண் வனவிலங்கு மீட்பாளர் 
ஆலியா 17 ஆண்டுகளுக்கும் மேலாக காட்டு விலங்குகளை மீட்டு அவற்றுக்கு மறுவாழ்வு அளித்து வருகிறார்.

ஜம்மு காஷ்மீரின் முதல் பெண் வனவிலங்கு மீட்பாளர் 

எழுதியவர் Sindhuja SM
Apr 15, 2023
02:00 pm

செய்தி முன்னோட்டம்

ஜம்மு காஷ்மீர் பார்ப்பதற்கு ஒரு சொர்க பூமி போல தெரிந்தாலும், காட்டு விலங்குகளால் அதிக மனிதர்கள் ஜம்மு காஷ்மீரில் பாதிக்கப்படுகின்றனர். கடந்த சில ஆண்டுகளில் இந்த சூழல் இன்னும் மோசமடைந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், ஜம்மு காஷ்மீரில் இருக்கும் ஒரே ஒரு 'பெண்' வனவிலங்கு மீட்பாளரான ஆலியா மிர்-க்கு வேலை பழு அதிகமாகி இருக்கிறது. ஆலியா 17 ஆண்டுகளுக்கும் மேலாக காட்டு விலங்குகளை மீட்டு அவற்றுக்கு மறுவாழ்வு அளித்து வருகிறார். ஜம்மு காஷ்மீரின் முதல் பெண் வனவிலங்கு மீட்பாளர் என்பதை தவிர, ஆலியா வனவிலங்கு SOS ஜம்மு மற்றும் காஷ்மீரின் திட்டத் தலைவராகவும் பணியாற்றி வருகிறார். பாம்புகள், கரடிகள் மற்றும் பறவைகள் முதல் சிறுத்தைகள் வரை அனைத்து வனவிலங்குகளையும் மீட்பதில் ஆலியா வல்லவர்.

details

ஆண்கள் அதிகம் ஆதிக்கம் செலுத்தும் துறை 

ஆலியாவின் இந்த முயற்சி காஷ்மீர் பள்ளத்தாக்கில் அவரை மிகவும் பிரபலமாக்கியுள்ளது. ஆலியாவுக்கு ஜம்மு காஷ்மீர் வனவிலங்கு பாதுகாப்பு விருதும் வழங்கப்பட்டுள்ளது. ஜம்மு மற்றும் காஷ்மீர் கூட்டுக் காடுகள், இந்த ஆண்டு மார்ச் மாதம் நடத்திய உலக வனவள தினக் கொண்டாட்டத்தில் லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹாவால் ஆலியா கௌரவிக்கப்பட்டார். ஜம்மு காஷ்மீர் பிராந்தியத்தில் இத்தகைய கௌரவத்தைப் பெற்ற முதல் பெண்மணி என்ற பெருமையையும் ஆலியாவுக்கு கிடைத்துள்ளது. ஆலியா இந்த தொழிலிலை ஆரம்பித்த போது, ​​​​ஆண்கள் அதிகம் ஆதிக்கம் செலுத்தியதால், நிறைய சவால்களை எதிர்கொண்டதாக தெரிவித்திருக்கிறார். தான் ஒரு அணியை வழிநடத்துவதாக மக்கள் முதலில் நம்பவில்லை என்றும், தன்னை வீட்டிற்குச் செல்லும்படி மக்கள் தூற்றினர் என்றும் அவர் கூறி இருக்கிறார்.