குடியரசு தினத்தில் 50 போர் விமானங்கள் பங்கேற்பு; பொதுமக்களுக்கு 32 ஆயிரம் டிக்கெட் விற்பனை;
ஜனவரி 26 ஆம் தேதி கொண்டாடப்படும் 74வது குடியரசு தினத்தில், 9 ரஃபேல் போர் விமானங்கள் மற்றும் கடற்படையின் IL- வான்வழிக் காட்சியை கொண்ட கர்தவ்யா பாதையில், மொத்தம் 50 விமானங்கள் பங்கேற்கின்றன. இதுகுறித்து, விமானப்படை மூத்த அதிகாரி தெரிவிக்கையில், ஜனவரி 26 குடியரசு தினத்தில் இந்திய கடற்படையில் உளவுப்பணி மேற்கொள்ளும் ஐஎல்-38 எனும் விமானம் குடியரசு தின நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தப்படும்., எனவும் இந்த விமானம் சுமார் 42 ஆண்டுகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார். மேலும், இந்த விமானம் முதலும் கடைசியுமாக குடியரசு தின நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.
50 விமானங்கள் நிகழ்ச்சியில் பொதுமக்களும் பார்வையிட ஆன்லைன் டிக்கெட் விற்பனை
9 ரஃபேல் விமானங்கள், ராணுவத்துக்குச் சொந்தமான 4 விமானங்கள் உள்பட 50 விமானங்கள் நிகழ்ச்சியில் பங்கேற்கின்றன என்றார். தொடர்ந்து, குடியரசு தினத்தில் பங்கேற்கும் இந்திய விமானப்படை அட்டவணை மாதிரியையும் அவர் வெளியிட்டார். டெல்லியில், ராஜ்பாத் என்ற பெயர் கடந்த ஆண்டு கர்தவ்ய பாதை என மாற்றப்பட்டு பிறகு, அங்கு நடைபெறும் முதல் குடியரசு தின விழா இதுதான். இந்த 50 போர் விமானங்கள் நிகழ்ச்சியில், எகிப்து படைப்பிரிவும் அணிவகுப்பில் கலந்து கொள்கிறது. பொதுமக்களுக்கு 32 ஆயிரம் டிக்கெட்டுகள் ஆன்லைனில் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக எகிப்து அதிபர் அப்தெல் பட்டா அல் சிசி கலந்து கொள்கிறார்.