Page Loader
சென்னை மெட்ரோ ரயிலில் ஒரே நாளில் 2.66 லட்சம் பேர் பயணம்
சென்னை மெட்ரோ ரயிலில் ஒரே நாளில் 2.66 லட்சம் பேர் பயணம்

சென்னை மெட்ரோ ரயிலில் ஒரே நாளில் 2.66 லட்சம் பேர் பயணம்

எழுதியவர் Nivetha P
Jan 19, 2023
08:13 am

செய்தி முன்னோட்டம்

சென்னையில் உள்ள மக்கள் மற்றும் வெளியூரில் இருந்து வருவோருக்கு மெட்ரோ ரயில் பயணம் நம்பகமான பாதுகாப்பான போக்குவரத்து வசதியை அளிக்கிறது. இதனால் சென்னை மெட்ரோவில் பயணம் செய்வோர் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது. மக்கள் மத்தியில் மெட்ரோ பயணம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதோடு, மெட்ரோ பயன்பாடும் அதிகரித்து வருகிறது. இச்சூழலில் பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறை முன்னிட்டு இதுவரை இல்லாத அளவு ஜனவரி 13ம் தேதியன்று ஒரே நாளில் மட்டும் 2,66,464 பேர் சென்னை மெட்ரோவில் பயணம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இந்த தொடர் விடுமுறை தினங்களில் பயணிகளின் எண்ணிக்கையும் கணக்கெடுக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

மனமார்ந்த நன்றி

அதிகபட்சமாக புரட்சித்தலைவர் டாக்டர். ராமச்சந்திரன் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 21,731 பயணிகள் பயணம்

அதன்படி, அதிகபட்சமாக புரட்சித்தலைவர் டாக்டர். ராமச்சந்திரன் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 21,731 பயணிகள் பயணம் மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது. அதனையடுத்து, கிண்டி மெட்ரோ ரயில் நிலையத்தில் 14,649பயணிகளும், திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையத்தில் 13,607பயணிகளும், விமான நிலைய மெட்ரோ நிறுத்தத்தில் 12.909 பயணம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஜனவரி 13ம் தேதி முதல் 17ம் தேதி வரை சென்னை மெட்ரோவில் பயணம் செய்தோரின் எண்ணிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, 14ம்தேதி 1.62 லட்சம், 15ம்தேதி 1.08 லட்சம், 16ம்தேதி 1.34லட்சம், 17ம்தேதி 1.65லட்சம் பேர் பயணம் செய்துள்ளார்கள். மேலும், மெட்ரோ ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களை பராமரிக்க மிகுந்த ஒத்துழைப்பு நல்கும் அனைத்து பயணிகளுக்கும் மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில் மனமார்ந்த நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.