8வது 'வந்தே பாரத்' ரயில் சேவை: வரும் ஜனவரி 19 துவக்கம்
2019 -ஆம் ஆண்டு, பிரதமர் மோடியால் துவக்கி வைக்கப்பட்ட வந்தே பாரத் ரயில் சேவை, இது வரை, நாடு முழுவதும் 7 வழி தடங்களில் செயல்பட்டு வருகிறது. எட்டாவது வந்தே பாரத் ரயில், செகந்திராபாத்- விஜயவாடா மார்கமாக செயல்படும். அந்த சேவையை, வரும் ஜனவரி 19 -ஆம் தேதி, பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைக்க இருக்கிறார். தற்போது வரை, வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் பின்வரும் வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன: புது தில்லி-வாரணாசி; புது தில்லி-வைஷ்ணோ தேவி கத்ரா; புது தில்லி-சண்டிகர்-உனா, மும்பை-அகமதாபாத்-காந்திநகர்; சென்னை-பெங்களூரு-மைசூரு.
வந்தே பாரத் ரயில் பற்றி சில சுவாரஸ்ய தகவல்கள்
சென்னை-பெங்களூரு-மைசூரு வழித்தடத்திற்குப் பிறகு, தென்னிந்தியாவில் தொடங்கப்படும் இரண்டாவது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் இதுவாகும். சென்னை ICF தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் இந்த வந்தே பாரத் ரயில்கள், பல புதுமைகளை கொண்டு தயாரிக்கப்படுகிறது. வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களில் அனைத்து வகுப்புகளிலும் சாய்வு இருக்கைகள் உள்ளன. அதே நேரத்தில் எக்ஸிகியூட்டிவ் கோச்களில், 180 டிகிரி சுழலும் இருக்கைகள் சேர்க்கப்பட்டுள்ளன. கூடுதலாக, எக்ஸ்பிரஸ் ஆட்டோமேட்டிக் கதவுகள், ஜிபிஎஸ்-அடிப்படையிலான ஆடியோ-விஷுவல் பயணிகள் தகவல் அமைப்பு, பொழுதுபோக்கு நோக்கங்களுக்காக ஆன்போர்டு ஹாட்ஸ்பாட் வைஃபை, வசதியான இருக்கைகள் மற்றும் பிற கவர்ச்சிகரமான அம்சங்களைக் கொண்டுள்ளது.